மாம்பழம் அனைத்து பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். மாம்பழம் இப்போது தோல் பராமரிப்புப் பொருட்களில் முக்கிய அங்கமாக மாறியுள்ளது, ஏனெனில் இது உங்கள் சருமத்தில் சிறப்பாக செயல்படுகிறது.
முகப்பரு மற்றும் முன்கூட்டிய முதுமையைக் குறைப்பதில் இருந்து சருமத்தைப் பொலிவாக்குவது முதல் கரும்புள்ளிகளைக் குறைப்பது வரை, வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் தாமிரம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களின் அற்புதமான மூலமாகும், அவை சருமத்தை உறுதிப்படுத்த கொலாஜனை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தினமும் ஒரு மாம்பழம் அல்லது இரண்டு மாம்பழம் சாப்பிடுவது எப்போதும் நல்லது என்றாலும், சீசன் காலத்தில், நீங்கள் அதை வெளிப்புறமாகவும் பயன்படுத்தலாம். உங்கள் சருமத்தை பிரகாசமாக்க இந்த எளிய ஹேக்குகளை முயற்சிக்கவும்.
ஊட்டச்சத்து விவரம்
வைட்டமின் சி - புற ஊதா கதிர்களுக்கு எதிராக பாதுகாக்கிறது, முகப்பருவால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் சருமத்தை ஒளிரச் செய்கிறது.
வைட்டமின் ஏ - கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் நேர்த்தியான கோடுகளைக் குறைக்கிறது.
பீட்டா கரோட்டின் - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்தை பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ - சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
வைட்டமின் கே – ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மற்றும் சிலந்தி நரம்புகளை குறைக்கிறது
வைட்டமின் B6 - சருமத்தில் உள்ள சீபம்-ஐ குறைக்கிறது.
தாமிரம் - நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது.
பொட்டாசியம் - சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.
மெக்னீசியம் - எண்ணெய் சருமம் மற்றும் முகப்பருவை குறைக்கிறது.
பளபளப்பான சருமத்திற்கு
ஒரு மாம்பழத்தை, 3 டீஸ்பூன் முல்தானி மட்டி மற்றும் 1 டீஸ்பூன் தயிருடன் கலந்து கெட்டியான பேஸ்ட் செய்யவும். உங்கள் முகத்தை சுத்தம் செய்து, பேக்கை முகத்தில் சமமாக தடவி 20 நிமிடங்கள் உலர விடவும். சாதாரண நீரில் கழுவவும்.
முகப்பரு தோலுக்கு
ஒரு பழுத்த மாம்பழத்திலிருந்து கூழ் பிரித்தெடுத்து, 1 தேக்கரண்டி கோதுமை மாவு மற்றும் 2 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி’ வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து கழுவவும்.
எக்ஸ்ஃபோலியேட்டிங் செய்ய
1 டேபிள் ஸ்பூன் மாம்பழ கூழ், 1 டீஸ்பூன் பிரவுன் சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் கலந்து கொள்ளவும். இந்த பொருட்களை நன்கு கலந்து உங்கள் முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இப்போது வித்தியாசத்தை காண குளிர்ந்த நீரில் கழுவவும்.
அண்டி-ஏஜீங் எஃபக்டுக்கு
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை அடித்து, அதில் மாம்பழ கூழ் சேர்த்து, மென்மையான பேஸ்ட் செய்யவும். இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் தடவி உலர விடவும். குளிர்ந்த நீரில் கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு மூன்று முறை இதை மீண்டும் செய்யவும்.
ஸ்கின் டேனிங் செய்வதற்கு
ஒரு மாம்பழத்தின் கூழை, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலக்கவும். அதை நன்கு கலந்து, ஸ்கின் டேனிங் ஆன பகுதி முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்களுக்கு பொலிவான சருமத்தை உடனடியாக வழங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.