Advertisment

சுகர் இல்லாத ஜூஸ், இளநீர், பீட்ரூட்.. பளபள சருமத்துக்கு ஃபரினா ஆசாத் பியூட்டி டிப்ஸ்

இன்ஸ்டன்ட் க்ளோ வேணும்னா, காஃபி தூள், தேன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவலாம்- ஃபரினா பியூட்டி டிப்ஸ்

author-image
abhisudha
New Update
Farina azad

Farina azad

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ஃபரினா ஆசாத், ஆங்கரிங், மாடலிங், நடிப்பு என எப்போதும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் ஃபரினா ஒருமுறை தனது சரும பராமரிப்பு குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.

Advertisment

தனது சரும பராமரிப்பு பற்றி பேசிய ஃபரினா; சரும பராமரிப்பு பொறுத்தவரைக்கும், நிறைய பேர் ஃபேஷியல், ப்ளீச் பண்றேனு போறாங்க.. நான் அதெல்லாம் நம்பமாட்டேன். நாம வெளியே பூசிக்கிறத விட, ஆரோக்கியமா சாப்பிடனும்.

சிலருக்கு சிக்கன் சாப்பிட்டா பருக்கள் வரும். அதுக்கு காரணம், நிறைய பேருக்கு இயற்கையாவே உடம்பு சூடா இருக்கும். சிலருக்கு ஹீட் ஒத்துக்காது. சாப்பிட்ட உடனே பரு வந்துரும். அப்படி இருக்கிறவங்க, சிக்கன் சாப்பிடும் போது அதை பேலன்ஸ் பண்ற மாதிரி தயிர், மோர் ஏதாவது சாப்பிடனும்..

சருமம் பிரகாசமா இருக்க தினமும் 2-3 ஃபிரெஷ் ஜூஸ் சர்க்கரை இல்லாம குடிக்கலாம். இளநீர் அவசியம் தினமும் குடிக்கனும். இதையெல்லாம் தினமும் பண்ணாலே, நம்ம சருமத்துக்கு பளபளப்பு கிடைக்கும்.

ஏபிசி ஜூஸ் எனக்கு நல்ல வேலை செய்ஞ்சது. காலையில வெறும் வயித்துல, ஏபிசி ஜூஸ் சர்க்கரை இல்லாம குடிக்கிறது கஷ்டம். அதனால நம்ம அதுக்கூட கொஞ்சம் எலுமிச்சை மற்றும் இஞ்சி சேத்துக்கலாம். ஹீமோகுளோபின் கம்மியா இருக்கிறவங்க, இதை தினமும் குடிச்சா எந்த சிகிச்சையும் இல்லாமலே ஹீமோகுளோபின் ஏறும்.

முக பராமரிப்பு பொறுத்தவரைக்கும் சில பேர் டோனர், மாய்ஸ்சரைசர், க்ளென்சிங், க்ரீம் எல்லாம் யூஸ் பண்ணுவாங்க. ஆனா நான் பொதுவாக மேக்கப் ரிமூவ் பண்ண, தேங்காய் எண்ணெய் தான் யூஸ் பண்ணுவேன். தேங்காய் எண்ணெய் அப்ளை பண்ணிட்டு, கழுவாம முகத்தை அப்படியே விட்டுருவேன். இது எனக்கு நல்லா வேலை செய்ஞ்சிருக்கு. தேங்காய் எண்ணெய்’ நைட் யூஸ் பண்ணுவேன். காலையில குளித்த பிறகு, ஏதாவதொரு மாய்ஸ்சரைசர் போடுவேன். டோனர், சீரம் எதுவும் யூஸ் பண்ண மாட்டேன்.

கண்களை பொறுத்தவரையில் கருவளையங்களுக்கு, உருளைக்கிழங்கை அரைச்சி, கண்ணுக்கு கீழே வைக்கலாம். அதேபோல நைட்டு தூங்கும் போது, யூஸ் பண்ண டீ பேக்ஸ் எடுத்து கண்ணுல வைக்கலாம். இதை பண்ணும் போது கருவளையம் குறையும்.

இப்போ ஃபங்ஷன் இருக்கு.. உங்களுக்கு இன்ஸ்டன்ட் க்ளோ வேணும்னா காஃபி தூள், தேன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவலாம். அதுக்கூட பாலும் சேர்த்துக்கலாம். நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

அதேபோல கஸ்தூரி மஞ்சள், பால் சேர்த்த ஃபேஸ் பேக் யூஸ் பண்ணலாம். சிலபேர் நிறைய மஞ்சள் சேர்ப்பாங்க. அதனால முகத்துல பேட்சஸ் வரும், ஸ்கின் டிரை ஆகும். மஞ்சள் கொஞ்சமா எடுத்துட்டு, பால் நிறைய சேர்த்து போடுறது நல்லது.

தினமும் பீட்ரூட்டை உதட்டுல தேய்க்கும் போது, இயற்கையாவே உதட்டுக்கு லிப்ஸ்டிக் நிறம் வரும். அதேமாதிரி ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மாய்ஸ்சரைஸரும் உதட்டுக்கு போடலாம். ஃபேஸ் பேக் போடும் போது முகத்தோடு விட்டுவிடாம கழுத்துக்கும், கைகளுக்கும் சேர்த்து போடனும். இவ்வாறு சரும பராமரிப்பு குறித்து ஃபரினா கூறினார்.

ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு, ஃபரினா பேட்டியளித்த வீடியோ இதோ!

&feature=emb_logo

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment