Advertisment

க்ரீன் டீ, ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய்.. நீண்ட கண் இமைகளுக்கு கிச்சன் வைத்தியம் இதோ!

இயற்கையாகவே அழகான நீளமான இமைகளை நீங்கள் பெறுவதற்கு சில சமையலறை ஹேக்ஸ் இங்கே உள்ளன.

author-image
WebDesk
New Update
Beauty tips in tamil

Home remedies for long eyelashes

சில பெண்களுக்கும், ஆண்களுக்கும் இயற்கையாகவே நீண்ட கண் இமைகள் இருக்கும். ஆனால் அதற்காக’ நீங்கள் அவற்றைப் பெற முடியாது என்று அர்த்தமல்ல. போலியான கண் இமைகள் எவ்வளவு எரிச்சலூட்டும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே இயற்கையாகவே அழகான நீளமான இமைகளை நீங்கள் பெறுவதற்கு சில சமையலறை ஹேக்ஸ் இங்கே உள்ளன.

Advertisment

க்ரீன் டீ

publive-image

இந்த அதிசய தேநீர் உங்கள் கண் கண் இமைகளை மீட்டெடுக்கும், ஏனெனில் இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் கண் இமைகள் வளர உதவும். காய்ச்சி ஆறிய தேநீரை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, அது ஆறியதும், காட்டன் பால்ஸ் கொண்டு’ உங்கள் கண்களில் தடவவும். தொடர்ச்சியாக 2-3 நாட்கள் இதை முயற்சி செய்து பாருங்கள், நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தைக் காண்பீர்கள்.

ஆலிவ் எண்ணெய்

publive-image

ஆலிவ் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் ஆலிவ் எண்ணெய் கண் இமை வளர்ச்சிக்கும் உதவுகிறது. உங்கள் விரல் நுனியில் ஒரு துளி ஆலிவ் எண்ணெயைத் தடவி, கண் இமைகளை (மூடி) ஒரு நிமிடம் மசாஜ் செய்யவும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கண்களைக் கழுவவும்.

விளக்கெண்ணெய்

publive-image

காஜல், மஸ்காராவை வழக்கமாகப் பயன்படுத்துவதால், கண் இமைகள் குறைவதற்கு வழிவகுக்கும். ஆனால், விளக்கெண்ணெய்’ நிச்சயமாக அந்த முடியை மீண்டும் பெற சிறந்த தீர்வாகும். முதலாவதாக, இது முடி வளர்ச்சி தூண்டுதலாக இருக்கிறது, இரண்டாவதாக இது இயற்கையாக நிகழும் கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது, இது கண் இமைகள் நீண்ட மற்றும் தடிமனாக வளர உதவுகிறது.

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு காட்டன் பாலில்’ சிறிது ஆமணக்கு எண்ணெயைத் தடவி, கண் இமைகளில் தடவவும். இப்போது, ​​எண்ணெயை மசாஜ் செய்து இரவு முழுவதும் விடவும். இதையே தொடர்ந்து உபயோகிப்பது உங்களுக்கு மிகப்பெரிய பலன்களைத் தரும்.

நீண்ட கண் இமைகளுக்கு இந்த சமையலறை வைத்தியத்தை கண்டிப்பா முயற்சி செய்து பாருங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment