Advertisment

இந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களில் சில...

தெமங்லாங் மாவட்டத்திற்கு கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் சேனாபதி மாவட்டமும், தெற்கில் சூரசந்த்பூர் மாவட்டம் மற்றும் மேற்கில் இம்பால் மற்றும் அஸ்ஸாமின் சில பகுதிகளும் சூழ்ந்துள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Best Tourists spots in india - இந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களில் சில...

Best Tourists spots in india - இந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களில் சில...

1) மோரே சென்டல்

Advertisment

மோரே டவுன் மணிப்பூரின் வர்த்தக நகரமாக விளங்குகின்றது. இது மியான்மாரின் நுழைவாயிலாகவும் இருக்கின்றது.

மணிப்பூர் எல்லைப் பகுதிகளுக்கு அப்பால் இருக்கும் பழங்குடியினர் பலர் ஒன்று கூடி இணக்கமாக வாழ்கின்றனர்.

மேலும் இந்த இடம் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதுடன் சுற்றுலாத் தலங்களின் முக்கிய இடமாகவும் விளங்குகின்றது.

இந்தியாவின் பொருளாதார சிறப்புகளைக் கொண்டு மோரேவின் உயர்ந்துள்ளது.

மோரே ,தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக பார்க்கப்படுகிறது. சூப்பர்-ஆசிய டிரான்ஸ் நெடுஞ்சாலைத் திட்டம் அங்கு முடிவடைந்தால் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.

சுற்றுலா விசா உள்ள சுற்றுலாப் பயணிகள், மோரேவிற்கு அருகில் உள்ள தமுவையும் கண்டு ரசிக்கலாம்.

பல வணிக நிறுவனங்களுக்கு நாடுகளுக்கு இடயேயான வர்த்தக வளர்ச்சியும் வளர்ந்து வருகின்றது. மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் மோரே உள்ளது, அதுபோல் 110 கிலோமீட்டர் தொலைவில் இம்பால் இருக்கிறது.

2) சண்டேல்

மணிப்பூரின் ஒன்பது மாவட்டங்களில் சண்டேல் மாவட்டமும் ஒன்று. நகரமாக இருக்கும் சண்டேல் மாவட்டத்தில் மோரே, சக்பிகரொங் சண்டேல் மற்றும் மாச்சி போன்ற உட்பிரிவுகளை கொண்டுள்ளது.

தெற்கே மியான்மாரும், கிழக்கில் உக்ரல், மேற்கில் மற்றும் தெற்கில் சூரசந்த்பூர் மற்றும் வடக்கில் தவ்பால் போன்ற மாவட்டங்கள் சண்டேல் மாவட்டத்தை சுற்றி அமைந்துள்ளது.

1974 ஆம் ஆண்டு தெங்னெளவ்பால் என்ற பெயரில் அறியப்பட்ட சண்டெல் , பின்பு 1983 ஆம் ஆண்டு சண்டேல் என்ற பெயரைப் பெற்றது.

சண்டேல் மாவட்டம் மிகவும் குறைந்த அளவிளான மக்கள் தொகையைக் கொண்ட இடம் இது.

இந்நிலையில், இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சண்டேல் மாவட்டதை இந்நாட்டின் மிகவும் பிந்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது. இதனால் இவ்விடம் ஆண்டுதோரும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான நிதி திட்டத்தின் மூலம் நிதியை பெற்று வருகின்றது.

ஆசிய சூப்பர் நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் சண்டெல் முக்கிய நகரமாக அறியப்படுகின்றது. நெடுஞ்சாலை செயல்படுமேயானால் மிக விரைவில் சண்டேல் பல ஆசிய நாடுகளுக்கு நுழைவாயிலாக அமைந்துவிடும்.

இந்த மாவட்டத்தில் பலவித தாவரங்களையும் விலங்குகளையும் காணலாம்.

சண்டல் செல்வதெப்படி?

சண்டேலை அடைய சாலை வழி, ரயில் மற்றும் விமான போக்குவரத்து என அனைத்து வசதிகளும் உள்ளன.

சண்டல் செல்ல சிறந்த காலம்,குளிர்காலத்தின் தொடக்கக் காலமே.

3) இம்பால்

மலைகளும், பள்ளத்தாக்குகளும் மற்றும் மலைத்தொடர்களும் புடைசூழ நிற்கும் ஒரு மலை மாவட்டமாக தெமங்லாங் மாவட்டம் உள்ளது.

இது மணிப்பூரில் உள்ள 9 மாவட்டங்களில் ஒன்றாகும். இயற்கை மற்றும் கலாச்சார மாறுபாடுகள் இங்கு நிரம்பியுள்ளது.

இங்கு அரிய வகை ஆர்கிட் பூக்கள், கறைபடாத கானகங்கள், அரிய உயிரினங்களில் வரும் பறவைகள் மற்றும் விலங்குகளும் உள்ளன. தெமங்லாங், ஹார்ன்பில் பறவைகளின் நிலம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மாவட்டம், மணிப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ளது. தெமங்லாங் மாவட்டத்திற்கு கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் சேனாபதி மாவட்டமும், தெற்கில் சூரசந்த்பூர் மாவட்டம் மற்றும் மேற்கில் இம்பால் மற்றும் அஸ்ஸாமின் சில பகுதிகளும் சூழ்ந்துள்ளன.

2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தெமங்லாங் மாவட்டத்தில் மிகக் குறைந்தளவே மக்கள் இருந்துள்ளனர்.

மேலும் குன்றுகள் மற்றும் மலைத்தொடர்களுக்கு நடுவில், சிறு சிறு கிராமங்களின் அணிவகுப்புகள் இருப்பது இந்த இடத்தின் மன நிறைவைத்தரும். ஆனால் அங்குள்ள மண்ணின் தன்மையால் தெமங்லாங்கில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

தெமங்லாங்கை அடையும்வழிகள் தெமங்லாங் வர திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் வந்து சேரலாம். தெமங்லாங் வர மிகவும் ஏற்ற பருவம் மழைக்காலம் முடிந்த பின்னர் வரும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் தெமங்லாங் சுற்றுலா வர ஏற்ற பருவமாகும். அந்நேரங்களில் போதுமான அளவு குளிர் பாதுகாப்பு உடைகளை கொண்டு வருதல் நலம்.

4) குகா அணைக்கட்டு

சூரசந்த்பூர் நகரத்தின் உயிர்நாடிகளில் ஒன்றாக குகா அணைக்கட்டு உள்ளது.

குகா அணைக்கட்டு, மின்சார உற்பத்தி மற்றும் தண்ணீர் அளிப்பு போன்ற காரணங்களுக்காக கட்டப்பட்டுள்ளன.

இது புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. ஒரு ஏரியின் மேல் கட்டப்பட்டுள்ள குகா அணைக்கட்டு, உள்ளூர்வாசிகளிடம் மிகவும் புகழ் பெற்றுள்ளன.

இது 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பிறகு , 2002-ம் ஆண்டு இது சீரமைக்கப் பட்டு பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப் படத் துவங்கியது.

2010-ம் ஆண்டு அது மீண்டும் மறு சீரமைக்கப்பட்டது. 2.5 பில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டின் உயரம் 38 மீட்டர் மற்றும் அகலம் 230 மீட்டராக உள்ளது.

இந்த அணைக்கட்டினால், இந்த மாவட்டத்தின் பொருளாதாரமும் கணிசமான அளவில் முன்னேற்றமடைந்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment