விரல் நகங்கள் பற்றிய கவலை இனி வேண்டாம். உங்களுக்கான தீர்வு இதோ.

உங்களின் விரல் நகங்கள் அழகாகவும் நீளமாகவும் வீட்டிலிருந்தபடியே வளக்கலாம். எளிதான முறையை பயன்படுத்தி உங்கள் விரல்களுக்கு அழகு சேருங்கள்.

ஆண்கள் முதல் பெண்கள் வரை அழகான ஆரோக்கியமான நகங்கள் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. குறிப்பாக பெண்களுக்கு அழகாகவும் நீலமாகவும் நகங்கள் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் உண்டு. சில பெண்களுக்கு நகம் உடைவது உலகப் போர் நிகழ்ந்த அளவுக்குச் சோகம் தரும். இப்போது அந்த மன வருத்ததிற்கு பெரிய குட்பை சொல்லிவிடுங்கள்.

நகங்கள் என்பது நம் உடலில் உள்ள கெரட்டின் என்ற பிரோட்டீன் வகையால் உருவாகும். இந்த கெரடின் நகங்கள் மட்டுமின்றி தலைமுடிகளிலும் உண்டு. ஒரு மனிதனின் விரல் நகம் மாதத்திற்கு, ஒரு இன்ச்சில் ஒரு பங்கு வளரும். சிலருக்கு இந்த வளர்ச்சி தோய்வுற்று இருக்கும்.

உங்களுக்கு நகம் மெதுவாக வளர்கிறதா? அல்லது சீக்கிரம் உடைந்து விடுகிறது என்றால் அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல்நலக் குறைவு, ஹார்மோன் மாற்றங்கள் உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பாகப் பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கற்ப காலத்தில் நகங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

விரல் நகம் எப்படி வளர்ந்தாலும் பராமரிப்பு என்பது மிக அவசியமான ஒன்று. நகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பது எப்படி? படித்து தெரிந்து கொள்ளுங்கள்

1. ஆலிவ் எண்ணெய்:

olive oil

வைட்டமின் ஈ நிறைந்துள்ள ஆலிவ் எண்ணெய் நல்ல ரத்த ஓட்டத்தை அளிக்கும் இதனால் நகங்கள் கனமாகவும் மிருதுவாகவும் வளரும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.

– தூங்குவதற்கு முன், ஆலிவ் எண்ணெய்யை வெதுவெதுப்பாகச் சூடு செய்து, உங்கள் விரல் நகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் காட்டன் துணியால் சுற்றி படுத்துக்கொள்ளலாம்.

– ஆலிவ் எண்ணெய்யை மிருதுவான பதத்திற்கு சூடு செய்து ஒரு கின்னத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் உங்கள் விரல்களை அந்த எண்ணெய்யில் 15 நிமிடங்கள் ஊர வைத்துக் கழுவலாம்.

2. தேங்காய் எண்ணெய்:

Coconut oil

தேங்காய் எண்ணெய் நகங்களில் உள்ள மாசு தன்மையை நீக்கும் சக்தி கொண்டது. உங்கள் நகங்களில் உள்ள அழுக்குகளை எளிதாகச் சுத்தம் செய்துவிடும்.

– தேங்காய் எண்ணெய்யை தூங்குவதற்கு முன்னர் நகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மசாஜ் செய்தால் அழுக்குகள் நீங்கி எவ்வித தொற்றும் ஏற்படாது. இதனால் உங்கள் விரல்களும் பல பலவென இருக்கும்.

– சிறிது தேங்காய் எண்ணெய்யுடன், கால் கப் தேன் மற்றும் 4 சொட்டு ரோஸ்மெரி எண்ணெய் சேர்த்து சூடுப்படுத்தவும். பின்னர் விரல்களை அதில் முக்கி 15 நிமிடம் ஊர வைத்தால் அழகான நகம் வளர்வது உறுதி.

3. ஆரஞ்சு சாறு:

orange-juice

நகங்கள் வளர ஃபாலிக் ஆஸிட் மிகவும் அவசியமாக ஒன்று. ஆரஞ்சு சாற்றில் இந்த ஃபாலிக் ஆஸிட் அதிகம் உண்டு. இது நகங்கள் வேகமாக வளர உதவும்.

– ஆரஞ்சு சாற்றை பிழிந்து வடிகட்டவும்

– அந்த சாரில் விரல் நகங்களை வைத்து 10 நிமிடம் காத்திருக்கவும்.

– பின்னர் கைகளை கழுவி, மிருதுவான துணியால் துடைக்க வேண்டும்.

இதை நாளுக்கு ஒரு முறை செய்தால் நகம் வளர்வதில் சிக்கல் இருப்பவர்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல் வேகமாக வளரும்.

4. எலுமிச்சை சாறு:

Lemon juice

எலுமிச்சை பழத்தில் வைட்டமின் ஸீ நிறைந்திருக்கும். இந்த வைட்டமின் ஸீ கொலேஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நகத்தை வேகமாக வளரச் செய்யும். மேலும் பழுப்பு நிறம் நீங்கி வெண்மையாகிவிடும்.

– ஒரு தேக்கரண்டி எளுமிச்சைசாறு மற்றும் 3 தேக்கரண்டி ஆளிவ் எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளவும். இதில் விரல்களை வைத்து 10 நிமிடம் ஊர வைத்துக் கழுவ வேண்டும்.

– அல்லது எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி நகங்கள் மீது தேய்த்து மசாஜ் செய்யவும்.

எலுமிச்சை உபயோகிப்பதால், சிலருக்கு விரல்களில் இருந்து ஏற்படும் துர் நாற்றம் உடனடியாக நீங்கும்.

×Close
×Close