bharatha naidu marriage video : செம்பருத்தி சீரியல் வில்லி பாரதா நாயுடு திருமண வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கேட்ட முதல் கேள்வி உங்களின் திருமணம் காதல் திருமணம் தானே என்பது தான். காரணம், கணவரின் மீது அவர் வைத்திருக்கும் அளவு கடந்த காதல் அனைத்து வீடியோவிலும் அழகாக தெரிவது தான்.
Advertisment
bharatha naidu marriage video : காதல் திருமணம்!
செம்பருத்தி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தோன்றும் மித்ராவின் நிஜப்பெயர் தான் பாரதா நாயுடு. ஆனால் அவரை செம்பருத்தி மித்ரா என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் சேனலில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலான செம்பருத்தி மித்ரா நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை எனலாம்.
இவர் வெள்ளித்திரையில் நாயகியாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் செம்பருத்தி சீரியல் கொடுத்த புகழ் அவரை எங்கையோ கொண்டு சேர்த்து விட்டது என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் இவர் பரத் என்பவரை காதலித்து திருமணம் செய்திக் கொண்டார். இவர்களின் திருமண வீடியோக்கள் இணையத்தில் படு வைரலாகியது. அதிலும் இவர்கள் தனியாக டூயட் ஆடிய வீடியோக்கள் லைக்ஸ்களை அள்ளியது.
சீரியலில் மிகவும் சீரியஸான பர்சன் போல் இருக்கும் மித்ரா நிஜத்தில் அப்படியே வேறுப்பட்டவராம். அவரின் காதல் கணவர் பரத்தை அவர் சுற்றி சுற்றி காதலித்த நாட்களை அவரின் நெருக்கமான பலரும் ஆச்சரியத்துடன் ஷேர் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் எளிமையாக நடைப்பெற்ற திருமணத்தை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த லாக்டவுண் பாரதாவுக்கு இன்னும் வசதியாக தனது கணவருடன், குடும்பத்துடன் மொத்த நேரத்தையும் செலவழித்து வருகிறார்.