Advertisment

’பாரதி கண்ணம்மா’ அறிவு : உண்மையில் யார் தெரியுமா?

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் காவ்யாவுக்கு வந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kaavya Arivumani, bharathi kannamma serial

Kaavya Arivumani, bharathi kannamma serial

Kavya Arivumani : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கறுப்பாக இருக்கும் கண்ணம்மா, புகுந்த வீட்டில் என்னென்ன பிரச்னைகளை அனுபவிக்கிறாள் என்பது தான் இந்த சீரியலின் கதை. பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரி பிரியனும் நடித்து வருகிறார்கள். இதில் பாரதியின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காவ்யா.

Advertisment

கொரோனா தாக்கம்: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த திமுக

பாரதி கண்ணம்மா சீரியலில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் காவ்யாவுக்கு, ரசிகர்கள் ஏராளம். அதோடு அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் காவ்யாவுக்கு வந்தது. ஆனால் அதனை தான் மிஸ் பண்ணி விட்டதாக பல நேர்க்காணல்களில் கூறியிருந்தார் காவ்யா.

சென்னையில் பிறந்த வளர்ந்த காவ்யா அடிப்படையில் ஆர்க்கிடெக்ட். இவருக்கு நடிகை நயன்தாராவை மிகவும் பிடிக்குமாம். சின்னத்திரை நயன்தாராவாக வலம் வர வேண்டும் என்பது தான் இவருடைய மிகப்பெரிய ஆசையாம். தவிர பையன்களை பின்னால் சுத்த விடுவதில் தான் மிகவும் கைத்தேர்ந்தவர் எனவும் பல நேர்க்காணல்களில் குறிப்பிட்டிருந்தார். அதோடு, புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் ஆர்வம் மிகுந்த காவ்யா, வித விதமான படங்களால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரம்ப செய்துள்ளார்.

”அந்த கண்ண பாத்தாக்கா” – இது மாஸ்டரின் ‘லவ்’விங் பாடல் ; வெளியானது லிரிக்கல் வீடியோ!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment