Advertisment

உன் கண்கள் என்னை கொல்ல.. ஐக்கி பெர்ரி நியூ வைரல் ஆல்பம்! எப்படி இருக்குனு பாருங்க!

ஐக்கி பெர்ரியின், ராணி எனும் புதிய பெப்பி நம்பர் சாங், இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஐக்கியுடன் திருமலி மற்றும் ஜெயசூர்யா ஆகியோரும் இணைந்து எழுதி பாடியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Iykki berry

Bigg boss fame Iykki berry new Rani song went viral

பிக்பாஸ் புகழ் ஐக்கி பெர்ரி, புதிதாக பாடிய ’ராணி’ ராப் சாங் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து ஐக்கி, அங்குள்ள மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.

ஜனவரி 2020-இல் ஐக்கி, தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார். ’மீ சின்ஸ் 1991’ என பெயரிடப்பட்ட அந்த ஆல்பம்’ பிரேவ், ஜீலஸி, ஹியூமர் பாலிசி, சியஸ்டர் பாலிசி என மொத்தம் ஒன்பது பாடல்களை கொண்டிருந்தது.

அதிலிருந்து கானா, ஹங்காமா, ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், ஜியோசாவன் மற்றும் பிறவற்றில் ஐக்கியின் பாடல்கள் எப்போதும் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.

ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிறகுதான் ஐக்கி’ வெளிச்சத்துக்கு வந்தார். ஆரம்பத்தில் ஐக்கியை பார்த்த பலரும் ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என நினைத்தனர். ஆனால், அவருக்கு தஞ்சாவூர் என்பது தெரியவந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் திகைத்து விட்டனர். அப்படி ஐக்கி தோற்றத்திலும், நடையிலும் பார்க்க தமிழ்ப்பெண்ணை போல இல்லாமல் பயங்கர மாடர்ன் லுக்கில் இருந்தார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு ஐக்கி பெர்ரி, ’எலா’ என்ற ராப் சாங் வெளியிட்டார்.

இப்போது ஐக்கி பெர்ரியின், ராணி எனும் புதிய பெப்பி நம்பர் சாங், இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஐக்கியுடன் திருமலி மற்றும் ஜெயசூர்யா ஆகியோரும் இணைந்து எழுதி பாடியுள்ளனர். இதில்’  திருமலி மலையாள ரேப்பர் மற்றும் பாடலாசிரியர். ஜெய்சூர்யா,  மியூசிக் டைரக்டர், ரெக்கார்டிங் ஆர்டிஸ்ட், மற்றும் மியூசிக் புரொடியூசர்.

வழக்கம்போல இந்த பாடலையும் ஐக்கியின் நண்பர் தேவ் மேஜர் தான் இசையமைத்திருந்தார்.

என்னை பாத்தாலே போதுமடா சாமி’ என ஐக்கி எழுதிய பாடல் வரிகள் அவர், ஒரு திறமையான லேடி ரேப்பர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.

இப்போது ஐக்கியின் இந்த ’ராணி’ பாடல் தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த பாடல்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment