Advertisment

இது புதுசு! எப்படி இருக்கு ஜூலி, பாலா காம்பினேஷன்?

இப்போது ஜூலி ஜீ தமிழ் டிவியின் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வருகிறார். பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னரான பாலா, மாடலிங், போட்டோஷூட் என பிஸியாக இருக்கிறார்

author-image
WebDesk
New Update
Juli and Bala

Bigg boss Juli and Balaji Murugadoss

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குபெற்று, கோஷங்களை எழுப்பியதன் மூலம் பாப்புலர் ஆனவர் ஜூலி. அதில் கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில், கலந்து கொண்டார். அதில் ஆரம்பத்தில் ஜூலிக்கு ரசிகர்கள் மத்தியில் நிறைய சப்போர்ட் இருந்தது. ஆனால் போகபோக, ஜூலியின் சில செயல்களால் ரசிகர்கள் எரிச்சலடைந்தனர்.

Advertisment

பிக்பாஸ் சீசன் வரலாற்றிலேயே ஜூலி அளவுக்கு ஹேட்டர்ஸ்களை சம்பாதித்த போட்டியாளர்களே இல்லையென்று சொல்லலாம்.

பிக்பாஸூக்கு பிறகு, ஒரு சில போட்டியாளர்களே படங்கள், ஷோக்கள் என ஆக்டிவ்வாக இருப்பார்கள். அதில் ஜூலியும் ஒருவர். வெள்ளித்திரை, சின்னத்திரை, யூடியூப் என அத்தனையிலும் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார்.

கலைஞர் டிவியின் கலா மாஸ்டர் நடுவராக இருந்த பிரபல நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நேரம் கலா மாஸ்டர் ஜூலிக்கு மிகப்பெரிய சப்போர்ட் ஆக இருந்தார். பிறகு, யூடியூபில் செலிபிரிட்டிகள் சமைக்கும் நிகழ்ச்சியையும் அவ்வப்போது தொகுத்து வழங்கினார். ‘

இதற்கிடையில், கொரோனா அலை’ இந்தியாவில் பரவத் தொடங்கியபோது ஒரு செவிலியராகவும் தனது முழு நேரப்பணியை அர்ப்பணிப்புடன் செய்தார்.

இப்படி பிஸியாகவே இருந்த ஜூலி, விஜய் டிவியில் ஓளிபரப்பான பிபி ஜோடிகள் சீசன் 1 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு, செண்டிராயனுக்கு ஜோடியாக ஆடினார். பிறகு மறுபடியும் பிபி அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

ஆனால் இம்முறை, பழைய ஜூலி போல அல்லாமல், தனக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம் தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டு நல்ல பெயருடன் வெளியே வந்தார்.. இப்போது ஜூலி ஜீ தமிழ் டிவியின் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வருகிறார்.

பிபி அல்டிமேட் வீட்டில் ஜூலிக்கும், பாலாஜி முருகதாஸூக்கும் அடிக்கடி முட்டிக் கொண்டே இருக்கும். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜூலியும், பாலாவும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது எடுத்த வீடியோக்களை ஜூலி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதைப் பார்த்த பலரும், உங்கள் இருவரையும் ஒன்றாக பார்ப்பதில் சந்தோஷம், நட்புன்னா சும்மா இல்லடா, சூப்பர் ஃபிரெண்ட்ஷிப் என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னரான பாலா, இப்போது மாடலிங், போட்டோஷூட் என பிஸியாக இருக்கிறார்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment