Advertisment

ஓட்ஸ், காபி தூள், சர்க்கரை.. 'பிக் பாஸ்' விஜியின் சரும பராமரிப்புக்கான ஸ்பெஷல் ஸ்க்ரப்!

Bigg Boss Vijayalakshmi Skincare Secrets 30 நாளுக்கு ஒருமுறை உங்களுடைய சருமம் தானாகவே இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும்.

author-image
WebDesk
New Update
Bigg Boss Vijayalakshmi Skincare Secrets Beauty Secrets Tamil News

Bigg Boss Vijayalakshmi Skincare Secrets Tamil News : சென்னை 28, அஞ்சாதே என வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து, தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என்று பேர் வாங்கியவர் விஜயலக்ஷ்மி. இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், தற்போது தன்னுடைய பெயரில் யூடியூப் சேனல் திறந்து, ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வருகிறார். பயனுள்ள பல டிப்ஸ்களை பகிர்ந்து வரும் விஜி, சமீபத்தில் சரும பராமரிப்பு பற்றியும் பகிர்ந்துள்ளார்.

Advertisment
publive-image

Bigg Boss Viji Latest photo

"சரும பராமரிப்பு சாதாரண விஷயமல்ல. நூறு பொருள்கள் உபயோகப்படுத்தியும் எந்த பயனுமில்லை என்று கூறுபவர்கள், முதலில் உங்கள் சருமத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியம். 30 நாளுக்கு ஒருமுறை உங்களுடைய சருமம் தானாகவே இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும். இது நாம் வாழும் நடக்கிற ஒன்று. இது அழகுக்காக நடக்கிற விஷயமல்ல. மாசுகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வதற்கான செயல். அதனால், அதற்கேற்றபடி சருமத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியம்.

publive-image

Vijayalakshmi with her Husband

இந்த இறந்த செல்களை வெளியேற்றுவது மிகவும் அவசியம். அப்படி அகற்றாமல் விட்டால்தான் பருக்கள் போன்ற சரும பாதிப்பு ஏற்படும். எனவே அதனை சரியான முறையில் அகற்றுவது முக்கியம். இது வெறும் முகத்திற்கு மட்டுமல்ல. தலையிலிருந்து கால் வரை அனைத்துக்கும் அவசியம்தான்.

publive-image

Bigg Boss Viji Latest Photos

தலைக்கு ப்ரவுன் சுகர், கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து தேய்த்து, ஊறவைத்துக் குளிக்கலாம். முகத்தைப் பொறுத்தவரை நிச்சயமாக இரவு வேளையில் செய்வது நல்லது. காபி தூள் மற்றும் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்து, நன்கு மசாஜ் கொடுத்து கழுவலாம்.அப்படியில்லை என்றால் ரோஜா இதழ்களை நிழலில் நன்கு காயவைத்து, அரிசி மாவுடன் அரைத்து, அதனைத் தேன் அல்லது பன்னீர் அல்லது தண்ணீரோடு கலந்து முகத்தில் அப்லை செய்யலாம்.

publive-image

Viji Latest Pictures

இதுபோன்று உங்கள் சருமத்திற்கு ஏற்ற எந்த சமையல் அறை பொருள்களையும் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்யலாம். இதழுக்கு ப்ரவுன் சுகர் மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து ஸ்க்ரப் செய்யலாம். உடலுக்கு, கொஞ்சமாக ஓட்ஸ், லெமன் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன்பு சிறிதளவு வெந்நீரை உடலில் ஊற்றி, பிறகு நாம் கலந்து வைத்திருக்கும் ஓட்ஸ் கலவையை அப்லை செய்யவேண்டும். உடலை நன்கு ஸ்க்ரப் செய்தபின், குளிக்கவும்.

publive-image

Vijayalakshmi Ahathiyan Family

இந்த வழிமுறைகள் எல்லாம், வாரத்திற்கு ஒன்று அல்லது இருமுறை செய்யலாம். அதேபோல வெய்யிலில் செல்லாமல் இருக்கும் வேளைகளில் செய்யலாம்"

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Skincare
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment