Advertisment

கர்நாடகா ஸ்பெஷல் பிஸிபேளாபாத்! அப்படியே சாப்பிடலாம்

சாம்பார் சாதத்திற்கு அடிமையான நாக்குகளிங்கு ஏராளம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bisibelabath recipe in tamil bisibelabath recipe

bisibelabath recipe in tamil bisibelabath recipe

bisibelabath recipe in tamil bisibelabath recipe : சாம்பர் சாதம் என்று சொன்னாலே எச்சில் ஊறும் நபர்கள் உண்டு. அதிலும் பாலாஜி பவன், சரவண பவன் சாம்பார் சாதத்திற்கு அடிமையான நாக்குகளிங்கு ஏராளம். கொரோனா காலத்தில் ஹோட்டல் போய் சாப்பிட முடியுமா என்ன? வாங்க வீட்டிலேயே செய்யலாம் ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்.

Advertisment

துவரம் பருப்பு - 1/2 கப்

தண்ணீர் - 4 கப்

விருப்பமான காய்கறிகள் - 1 கப்

(கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், முருங்கை)

புளி கரைசல் - 1/4 கப்

சாம்பார் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

பூண்டு - 10

நெய் - 1 தேவையான அளவு

பச்சைமிளகாய் - 5

எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க :

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

பெருங்காய தூள் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

bisibelabath recipe: செய்முறை!

வெங்காயம், காய்கறிகளை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, நெய், ப.மிளகாய், பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.

பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெட்டி வைத்த காய்கறியை போட்டு அத்துடன் சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேக விடவும்.

காய்கறி வெந்ததும் புளி கரைசல் விட்டு நன்கு கொதித்ததும் நன்கு வெந்த பருப்பு சாதத்தை கலந்து விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சாதத்தோடு சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment