’மரண சாலை’யாக இருந்தாலும் சாகச வீரர்களுக்கு மிக பிடித்தமான இடம்

பொலிவியா நாட்டில் உள்ள யுங்கஸ் மலைப்பகுதியில் உள்ள சாலை, பார்த்தாலே உயிர் போய்விடும் மலைப்பாதை. ஆனால், சாகச விரும்பிகள் ‘மரண சாலைக்கு’ செல்கின்றனர்.

பொலிவியா நாட்டில் உள்ள யுங்கஸ் மலைப்பகுதியில் உள்ள சாலை, பார்த்தாலே உயிர் போய்விடும் அளவுக்கு ஆபத்தான மலைப்பாதை. ஆனால், சாகச விரும்பிகள் பலர் 56 கிலோமீட்டர் கொண்ட அந்த ‘மரண சாலைக்கு’ சென்றுகொண்டுதான் இருக்கின்றனர். இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் உயிரைவிட்டுள்ளனர். ஆனாலும், வருடந்தோறும் அந்த பகுதியில் மிதிவண்டி போட்டி மற்றும் ‘ஸ்கை ரேஸ்’ எனப்படும் ஓட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

1. இந்த சாலையில் மிதிவண்டி ஓட்டுதல் புகழ் வாய்ந்த சாகச பயணம்.

2. ’மரண சாலையில்’ ஸ்கை ரேஸ் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்.

3. 15,000 அடி உயரத்தில் உள்ள இந்த ‘மரண சாலையில்’, மிதிவண்டி போட்டியின் போது ஓய்வெடுக்கும் சாகச வீரர்கள்.

4. ஸ்கை ரேஸ் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டு ஓடும் வீரர்.

5. 15,000 அடியில் உள்ள இந்த சாலையின் பெரும்பாலான பகுதிகள் சரளை கற்களைக் கொண்டிருக்கும்.

6. ரொனால்ட் லே ரைவா எனும் சாகச வீரர், ‘ஸ்கை ரேஸில்’ கலந்துகொண்டு வெற்றியை உணரும் தருணம்.

7. மிதிவண்டி போட்டியில் கலந்துகொண்டு, ‘மரண சாலையின் சுஸ்பிபாதா எனும் பகுதியில் செல்லும் வீரர்கள்.

8. ஸ்கை ரேஸ் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் ரெட் க்ராஸ் டெண்ட் என்ற பகுதியில் ஓய்வெடுக்கின்றனர்.

9. பனிமூட்டமாக இருந்தாலும் ‘ஸ்கை ரேஸ்’ வீரர் தொடர்ந்து ஓடும் புகைப்படம்.

10. பமீலா என்ற வீராங்கணை தன் வெற்றியை உணர்ந்த தருணம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close