Advertisment

சூப்பரான வெங்காய போண்டா… மழை நேரத்தில் சாப்பிட அப்படி இருக்கும்… சிம்பிள் செய்முறை!

Vengaya Bonda Recipe simple tips in tamil: மழை நேரத்தில் சாப்பிட அருமையாக இருக்கும் வெங்காய போண்டா தயார் செய்வதற்கான சிம்பிள் செய்முறையை இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bonda Recipe tamil: how to make Onion Bonda Recipe in tamil

 bonda Recipe tamil: பருவ மழை பெய்து வரும் இந்த நேரத்தில் சூடாக எதாவது சாப்பிட வேண்டும் என நம்மில் பலர் நினைப்போம். இந்த தருணத்தில் நமக்கு ஏற்கனவே தெரிந்ததையே அடிக்கடி செய்து சாப்பிட்டால் போர் அடிக்கும். எனவே தான் உங்களுக்காகவே ஈஸியான ஒரு ரெசிபியை பகிர்ந்துள்ளோம்.

Advertisment

அதுதான் சூடான காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் வெங்காய போண்டா. இந்த அற்புதமான ரெசிபியை தயார் செய்ய உங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. வெறும் 10 நிமிடங்கள் போதும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ரொம்பவே விரும்புவார்கள்.

சரி, இப்போது எப்படி அருமையான வெங்காய போண்டா தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

வெங்காய போண்டா செய்யத் தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்

பெரிய வெங்காயம் - 2

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1 ஸ்பூன்

மிளகாய்தூள் - 1 ஸ்பூன்

கோதுமை மாவு - 4 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

publive-image

வெங்காய போண்டா ஈஸியான செய்முறை இங்கே:

முதலில் பெரிய வெங்காயத்தை எடுத்து அவற்றின் தோல் நீக்கி நீளமாக மற்றும் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு, ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவை சேர்த்து, அவற்றுடன் சீரகம், மிளகாய்த்தூள், கோதுமை மாவு, உப்பு, வெங்காயம் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் சிறிதளவு ஊற்றி தண்ணீர் நன்றாக பிசைந்து தனியாக வைக்கவும்.

மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

எண்ணெய் நன்கு சூடேறியதும் அடுப்பின் தீயை குறைவாக வைத்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி நன்கு வேகவைத்து எடுக்கவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான வெங்காய போண்டா தயாராக இருக்கும்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Tamil Food Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment