நான்கு கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை; பிரத்யேக புகைப்படம்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள ராஜமகேந்திரவரம் எனும் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில், மணி என்ற 25 வயது பெண்மணி நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், இந்தக் குழந்தை நான்கு கால்களுடன் பிறந்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது மிகவும் அரிதான நிகழ்வு என்றும், பத்து லட்சம் பிரசவங்களில் ஏதாவது ஒன்று இப்படி ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நான்கு கால்களுடன் பிறந்துள்ள குழந்தையை காண மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close