Advertisment

ப்ரா அணியாமல் போறது ட்ரென்டிங் மட்டுமல்ல... இவ்ளோ வசதி இருக்கு!

இந்த நவீன காலத்தில் ப்ரா இல்லாத தோற்றம் ஃபேஷன் மற்றும் பெண்ணியத்தில் ஒரு பெரிய போக்காக பார்க்கப்படுகிறது. உண்மையில் ப்ரா அணிவதை விட அணியாதது சிறந்ததா?

author-image
WebDesk
New Update
braless benefits

ப்ராலெஸ்ஸுக்கு செல்வது பெண்களின் உடலை இயல்பாக்குவதற்கும், பெண்ணின் மார்பை பற்றிய தவறான எண்ணத்தை குறைப்பதற்கும் ஒரு சிறிய படியாகும்.

பெண்கள் ப்ரா உள்ளாடை அணியாமல் இருப்பது தனிப்பட்ட விருப்பம். எனினும் அனைத்து பெண்களுக்கும் ப்ரா சரியாக அமைவதில்லை.

நீண்ட நேர அணிந்துக் கொண்டு அதனை சலிப்புடன் கழற்டி வீசும் பெண்களும் இருக்கதான் செய்கிறார்கள். அது அவரவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பொறுத்தது.

Advertisment

ப்ராலெஸ் சிறந்த தேர்வு

மேலும், பொதுவாக சிறந்த பொருத்தம் கொண்ட ப்ரா கூட நீண்ட நாள்களுக்குப் பிறகு சங்கடமாக இருக்கும். இதுமட்டுமின்றி தொடர்ச்சியாக ப்ரா அணியும்போது, எலாஸ்டிக் தோல் பட்டைகளில் பதிந்து தடம் விழும்.

இதனால், ப்ராவை கழற்றும்போது உடனடி நிவாரண உணர்வு கிடைக்கும். அப்பெண்களுக்கு ப்ராலெஸ்ஸில் இருப்பது, செல்வது சிறந்த தேர்வாக இருக்கும்.

ஆறுதல் உணர்வு

இதனால்தான் என்னவோ நீண்ட காலமாக, பல பெண்கள் ப்ராலெஸ்ஸுக்குப் பழகியவுடன், தங்கள் உடலில் அதிக சுதந்திரம் மற்றும் ஆறுதல் உணர்வு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், மணிக்கணக்கில் ப்ரா அணிவதால் ஏற்படும் சுருங்கிப் போகும் உணர்வு பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும். இந்த சுருக்கம் மார்பு மற்றும் முதுகில் இரத்த ஓட்டத்தை தடுக்கலாம், இது முதுகு தசைகள் வலிக்கு வழிவகுக்கும்.

நல்ல தூக்கம்

மேலும், படுக்கையில் ப்ரா அணியும் பெண்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அந்தச் சுமையிலிருந்து உங்களை விடுவித்தவுடன் நீங்கள் நன்றாக உறங்குவீர்கள்.

இதுமட்டுமின்றி, ப்ராக்கள் வியர்க்கும் பகுதிகளுக்கு எதிராக இறுக்கமாக அமர்ந்திருக்கும். எனவே, ப்ரா இல்லை என்றால், உங்களுக்கு குறைவாக வியர்வை சுரந்து, வேகமாக உலர்ந்து விடும்.

தோல் சுகாதாரம்

ப்ராக்கள் சருமத்தில் உள்ள வியர்வை மற்றும் அழுக்குகளை உறிஞ்சுவதால், அவை தோல் எரிச்சல் மற்றும் முகப்பருவை கூட ஏற்படுத்தும்.

மேலும், மார்பகங்கள் இயல்பாகவே உடலுறவுக்கு தொடர்பானவை அல்ல. தாய்ப்பாலுக்கு பால் உற்பத்தி செய்வதே அவைகளின் முக்கிய பணியாகும்.

ப்ராலெஸ்ஸுக்கு செல்வது பெண்களின் உடலை இயல்பாக்குவதற்கும், பெண்ணின் மார்பை பற்றிய தவறான எண்ணத்தை குறைப்பதற்கும் ஒரு சிறிய படியாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment