Advertisment

மூன்றே பொருட்களில் சின்ன வெங்காயம் சட்னி: அந்த தேங்காய் எண்ணெயை மறந்துடாதீங்க!

Breakfast Chutney Recipe இதற்கு சின்ன வெங்காயம் உபயோகித்தால் அதீத சுவை கொடுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Breakfast Chutney Recipe Onion Chutney  with Coconut Oil Food recipes Tamil News

Small Onion Chutney  with Coconut Oil

Small Onion Chutney Recipe Tamil : சூடான இட்லி, தோசையோடு இன்ஸ்டன்ட்டாக ஓர் சைடு டிஷ் செய்து சாப்பிட இந்த வெங்காய சட்னியை முயற்சி செய்து பாருங்கள். வெங்காயம் வைத்து வித்தியாச சட்னியாக இது நிச்சயம் இருக்கும். இதற்கு சின்ன வெங்காயம் உபயோகித்தால் அதீத சுவை கொடுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 கப்

உலர்ந்த சிவப்பு மிளகாய் - 4-5

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு -  தேவையான அளவு

உப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், இந்த ரெசிபிக்கு வெறும் 3 பொருட்களே தேவை.

Breakfast Chutney Recipe Onion Chutney  with Coconut Oil Food recipes Tamil News Onion Chutney with Coconut Oil

செய்முறை

சூடான வாணலியில், தேங்காய் எண்ணெய்யை மிதமான தீயில் சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அடுப்பைக் குறைத்து, வாணலியில் வெங்காயத்தைச் சேர்க்கவும்.

பிறகு சிவப்பு மிளகாயைச் சேர்த்து, வெங்காயம் வதங்கி பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதற்குக் குறைந்தது 15 நிமிடங்கள் வரை ஆகும்.

தீயை அணைத்து, இந்தக் கலவையை நன்கு ஆறவைக்கவும்.

ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.

இறுதியாகச் சிறிது தேங்காய் எண்ணெய்யைச் சேர்த்து சூடான தோசை மற்றும் இட்லியுடன் பரிமாறவும்.

தேங்காய் எண்ணெய் இந்த சட்னிக்கு மிகவும் முக்கியம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment