Breakfast Tamil News, Breakfast Simple Ideas: மறுநாள் காலை டிபனுக்கு என்ன செய்வது என்று எத்தனை முதல் நாள் இரவு யோசித்திருப்பீர்கள்? இந்த அனுபவம் பல பெண்களுக்கும் இருக்கும். ஒவ்வொரு நாளும் சமைக்க புதிதாக யோசிப்பது சோர்வையும், சலிப்பையும் உண்டாக்கும். ஆக இப்படியெல்லாம் நீங்களும் மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தால், உங்களின் பிரேக் ஃபாஸ்ட் கவலையை எங்களால் தீர்க்க முடியும். இது உங்களை சலிப்படைய செய்யாது, நிறைய தயாரிப்பு மற்றும் அதிக நேரமும் தேவையில்லை. என்னவாக இருக்கும் என நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், அதற்கு பதில் ‘பார்லி உப்புமா’.
மிதமான வெப்பத்தில் பிரஷர் குக்கரில் எண்ணெயை சூடாக்கவும். கடுகு சேர்த்து வெடித்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்க்கவும். இதனை சில நொடிகள் நன்றாக வறுக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை வதக்கவும்.
கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும். இடையில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்போது பார்லியை சேர்த்து, சில நிமிடங்கள் கிளறவும். நன்கு கிளறிக் கொண்டே இருங்கள், இல்லையெனில் பார்லி குக்கரின் அடிப்பகுதியில் ஒட்டக்கூடும்.
இப்போது ஒரு கப் தண்ணீரை ஊற்றவும். உப்பு மற்றும் தக்காளி சேர்த்து கலவையை மீண்டும் கிளறவும்.
பின்னர் பிரஷர் குக்கரை இரண்டு விசில்களுக்கு விடவும். அதன் பிறகு அடுப்பை அணைத்து, பிரஷரை வெளியேற்றவும்.
பிரஷர் வெளியேறியதும் குக்கரைத் திறந்து, எலுமிச்சை சாறை கலந்து, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். பின்னர் நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.
குறிப்பு: இந்த ஆரோக்கியமான உணவுடன், தேங்காய் சட்னி டக்கராக இருக்கும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”