Advertisment

பீரியட்ஸ் முன் மார்பக வலி.. கவலைப்பட வேண்டிய விஷயமா?

இது வழக்கமாக மாதவிடாய் சுழற்சிக்கு ஐந்து முதல் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கும். உங்கள் மார்பகங்கள் வலியாகவும், கனமாகவும், மென்மையாகவும் உணரலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Breast pain before period

Breast pain before period

வீக்கம், பிடிப்புகள், அசெளகரியம் மற்றும் வலி ஆகியவை மாதவிடாய் வருவதை அறிவிக்கும் சில அறிகுறிகளாகும். சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன் மார்பகம் மென்மை ஆவதால், மார்பகங்கள் புண் ஆகின்றன. ஆனால், இது கவலைப்பட வேண்டிய விஷயமா?

Advertisment

மருத்துவர் தனயா – இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவில், மாதவிடாய் காலத்தில், ஒரு பெண்ணின் உடல் குழந்தைப்பேறுக்கு தயாராகிறது.  மேலும் கர்ப்பம் மற்றும் குழந்தையின் எதிர்காலத்திற்காக மார்பகங்களில் பால் உற்பத்தியை செயல்படுத்துகிறது.

"ஈஸ்ட்ரோஜன் (பெண் இனப்பெருக்க அமைப்பு மற்றும் இரண்டாம் நிலை பாலின பண்புகளின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக்கு பொறுப்பான பாலின ஹார்மோன்) மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் (மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் மற்றும் கரு உருவாக்கம் ஆகியவற்றில் ஈடுபடும் பாலின ஹார்மோன்) மார்பகங்களுக்குள் மாற்றங்களுக்கு வழிவகுக்கும், அவை வளர வைக்கின்றன. மாதவிடாய்க்கு முன் இந்த திடீர் வளர்ச்சியின் காரணமாக, மார்பகங்கள் கனமாகி, வலிக்க ஆரம்பித்து, மென்மையாக மாறும். ஒவ்வொரு மாதமும் வலி கடுமையானதாக இல்லாத வரை இது மிகவும் பொதுவானது என்று தனயா கூறினார்.

இருப்பினும், திடீரென்று நீங்கள் அனுபவிக்கும் வலியில், சில மாற்றங்களைக் கண்டாலோ அல்லது சிறிது வெளியேற்றம் ஏற்பட்டாலோ அல்லது இதற்கு முன் இல்லாத கட்டியைக் கண்டாலோ, நீங்கள் உங்கள் மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும். வலியைக் குறைக்க வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று தனயா பரிந்துரைத்தார்.

இதை ஒப்புக்கொண்ட மகப்பேறியல் மருத்துவர் நுபுர் குப்தா, ஈஸ்ட்ரோஜனின் அதிகரித்த அளவு மார்பக குழாய்களை பெரிதாக்குகிறது, மேலும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு உயரும் போது, ​​பால் சுரப்பிகள் பெரிதாகின்றன - இவை இரண்டும் சேர்ந்து, உங்கள் மார்பகத்தை புண்படுத்தும்.

இது "சுழற்சி மார்பக வலி"யாக இருக்க வேண்டும், இது வழக்கமாக மாதவிடாய் சுழற்சிக்கு ஐந்து முதல் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கும். உங்கள் மார்பகங்கள் வலியாகவும், கனமாகவும், மென்மையாகவும் உணரலாம், சில சமயங்களில் கூர்மையான, படபடப்பு வலி கூட இருக்கலாம்.

publive-image

வலியை குறைக்க சில வழிகளை மருத்துவர் பட்டியலிட்டார்

நிறைய திரவம் குடிக்கவும்

இது வயிற்று வீக்கத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், பிடிப்பைக் குறைத்து உங்களை நன்றாக உணர வைக்கும்.

 சரிவிகித உணவு

பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும். உப்பு, சர்க்கரை, ஆல்கஹால் மற்றும் காஃபின் உட்கொள்ளலைக் குறைக்கவும். புகைபிடிப்பதை தவிர்க்கவும். ஃபோலிக் ஆசிட், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்ட சில சப்ளிமெண்ட்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம், இது பிடிப்பைக் குறைக்கவும் மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.

நல்ல தூக்கம்

இந்த நேரத்தில் 7-9 மணி நேரம் தூங்குவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உங்கள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த நன்மை பயக்கும்.

உடல் செயல்பாடு

ஒரு நபர் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளைச் செய்ய வேண்டும். இது மார்பக மென்மை அறிகுறிகளை மட்டுமல்ல, பிற மாதவிடாய் முன் அறிகுறிகளையும் போக்க உதவும்.

சுய பாதுகாப்பு

எப்போதும் உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

"எளிய வலி நிவாரணிகள் அல்லது ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்" போன்ற சில மருந்துகள் உள்ளன.

புண் மார்பகங்களுக்கு, சில சமயங்களில் டையூரிடிக்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது, அல்லது உங்கள் வலியைப் போக்க ஒரு ஹீட்டிங் பேடு பயன்படுத்தலாம். ஒருவருக்கு புதிய கட்டி ஏற்பட்டாலோ, மார்பகத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது முலைக்காம்புகளில் இருந்து வெளியேற்றம் ஏற்பட்டாலோ, வலி இருந்தாலோ, மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment