Advertisment

அறுவை சிகிச்சை பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் - ஒவ்வொரு கணவனும் தெரிந்து கொள்ள வேண்டியவை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அறுவை சிகிச்சை பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் - ஒவ்வொரு கணவனும் தெரிந்து கொள்ள வேண்டியவை

Dr Shweta Goswami

Advertisment

தாய்பால் ஊட்டுவது ஒரு இயற்கையான நிகழ்வு. எனினும் பல சந்தர்ப்பங்களில் பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல்நிலை பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இதன் காரணமாக தாய் பாலுட்டுவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன, அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நிகழும் போது. ஆனால் இதன் காரணமாக தாய்பால் ஊட்டுவதை நிறுத்திவிட வேண்டும் என்பது அர்த்தமில்லை. மன அழுத்தம், ஹார்மோன் குறைபாடு, சோர்வு ஆகியவை புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மிக சாதாரணமாக ஏற்படுகின்ற பிரச்சனைகள். அதிலும் சில தாய்மார்களுக்கு பிரசவத்துக்கு பின்பு பிரசவத்தால் ஏற்படுகின்ற மன அழுத்தம் காரணமாக தாய்பால் ஊறுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

தாய்ப்பால் ஊட்டும் பொழுது பிரசவித்த தாய்மார்கள ஒரு பால் உற்பத்தி செய்யும் இயந்திரமாகவே எந்நேரமும் செயல்படுகின்றனர். எனவே முதலாவதாக பாலுட்டும் தாய்மார்கள் அதிகப்படியான நீர் அருந்த வேண்டும். இது பாலூட்டும் பொழுது தாய்மார்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமாகும். தேவையான நீர் உடலில் இருக்கும் பொழுது அதிகப்படியான பால் சுரக்கும். இதன் காரணமாக தாயும் உடல் ஆற்றலுடன் அன்றைய நாள் முழுவதையும் கழிக்க முடியும். பாலூட்டும் தாய்மார்கள் எளிமையான அதே சமயம் சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும்.

10% இந்தியர்களுக்கு புற்று நோய் வரும்; 15 பேரில் ஒருவர் இறப்பார் - உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை

பாலூட்டும் தாய்மார்கள் எப்பொழுதும் தங்கள் வீடுகளில் பச்சையான காய்கறிகளையும் பழங்களையும் வைத்திருக்க வேண்டும். இதனால் பசிக்கும் பொழுது சத்து இல்லாத நொறுக்கு தீனிகளையும் கலோரி குறைவான உணவுகளையும் உட்கொள்வதை தவிர்க்கலாம்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிகப்படியான பால் ஊறவைக்கும் சில உணவு வகைகளை பார்ப்போம்.

வெந்தயம், ஓமம், பாதாம் பருப்பு, எள், தேங்காய்,

அறுவை சிகிச்சை பிரசவத்துக்கு பிந்தைய பிரச்சனைகள்

வாழ்க்கையில் இருந்து மன அழுத்தத்தை விரட்டுங்கள்

முதலாவதாக அதிகமாக மன அழுத்தத்துடன் இருப்பதை தவிருங்கள். பிரசவத்துக்கு பிறகு அதிலும் முதல் பிரசவத்துக்கு பிறகு மனம் அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானது. மேலும் இந்த நேரத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தம் பாலூட்டுவதில் இடையூறை ஏற்படுத்தும். மன அழுத்தத்துடன் உள்ள ஒரு தாய் தன் குழ்ந்தைக்கு பாலூட்டுவது கடினமானது. மேலும் அந்த குழந்தையும் சரியாக பால்குடிப்பது கடினம். ஆழ்ந்து சுவாசிப்பது போன்ற பயிற்சிகளை செய்து பாலூட்டும் தாய்மார்கள் தங்களை அமைதியாகவும், தளர்வாகவும் இருக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சரியான உணவுகளை உண்ணுங்கள்

நீங்கள் உண்ணும் அனைத்து உணவுகளும் தாய்பாலோடு நேரடியாக சம்பந்தப்படும் என்பதால், சம்ச்சீரான உணவை உண்ண பழகிக்கொள்ளுங்கள். நீராகாரங்களை அதிகப்படியாக அருந்த பழகிக்கொள்ளுங்கள்.

தாய்பாலூட்டுவதற்கு இடையில் சின்ன இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்

உங்களுடைய குழ்ந்தை அடிக்கடி தாய்ப்பால் குடிக்குமானால், தாய்பால் ஊருவது தடைப்படும். எனவே தாய்பால் ஊட்டுவதற்கு இடையில் சின்ன சின்ன இடைவெளி விட்டுக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் - 'வாரத்துல 7 நாளும் கறி தான்'-ங்கற கேஸ்களுக்கு ரொம்பவே ஆபத்து!

இரும்பு சத்து

கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல தாய்பால் ஊட்டும் பொழுதும் இரும்பு சத்து தாய்மார்களுக்கு அவசியம்.

தாய்ப்பால் ஊட்டுவது என்பது தாய்மார்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் ஒரு சிறந்த விஷயம்.

தமிழில் - மகேஷ் எஸ்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment