Advertisment

தாய்மார்கள் தங்கள் பாலூட்டலை எவ்வாறு அதிகரிக்கலாம்?

Breastfeeding Awareness Week: பாலூட்டும் தாய்மார்கள் அதிக பால் விநியோகத்திற்காக உட்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
breastfeeding week

increase lactation milk supply food items

ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisment

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது அவர்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.

90 சதவீத பெண்கள், தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான பாலை உற்பத்தி செய்ய முடியும் என்று அறிவியல் ஆராய்ச்சி கூறினாலும், 41 சதவீத குழந்தைகள் மட்டுமே தங்கள் வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.

இதுகுறித்து நாகர்பாவியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகர் ப்ரீத்தி கவுடா கூறுகையில், " மார்பக நரம்புகள், 'புரோலாக்டின்' வெளியிட மூளைக்கு சமிக்ஞை செய்கின்றன.

இது பால் உற்பத்திக்கு காரணமான ஹார்மோன் ஆகும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை வழக்கமாக வைத்தால், குறிப்பாக இரவில், ஆக்ஸிடாஸின் எனப்படும் மற்றொரு முக்கியமான ஹார்மோன் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது.

கூடுதலாக, தாய் இருக்கும் சூழல், அவளது உணர்வுகள், உணவுமுறை மற்றும் கடந்த காலத்தில் அவருக்கு ஏதேனும் மருத்துவப் பிரச்சனைகள் இருந்திருந்தால், அதுவும் பால் உற்பத்தியை தீர்மானிக்கிறது என்று நிபுணர் கூறினார்.

எனவே, சத்தான உணவு மற்றும் தாய்மார்களை நிதானமாகவும், மன அழுத்தமில்லாமல் வைத்திருந்தால், பாலூட்டலை அதிகரிக்கலாம்.

பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் சவிதா ஷெட்டி கூறுகையில், “பாலூட்டும் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தை விட கலோரி தேவை அதிகம்” என்றார்.

பாலூட்டுதலை அதிகரிக்கும் உணவுகள்

பன்னர்கட்டா ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் ஷாலினி அரவிந்த், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, சி, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட பரிந்துரைத்தார். இவை பால் உற்பத்தியை அதிகரிக்கும். "இந்த உணவுகள் உடலில் புரோலேக்டின் அளவை அதிகரிப்பதன் மூலம் தாயின் பால் ஓட்டத்தை ஊக்குவிக்கின்றன," என்று அவர் கூறினார்.

லாக்டோஜெனிக் உணவுகளில் வெந்தயம், பார்லி, அடர் பச்சை இலை காய்கறிகள், கீரைகள், கேரட், மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், நட்ஸ், பச்சை பப்பாளி, இஞ்சி, பூண்டு, எள் விதைகள் மற்றும் சாலியா விதைகள் ஆகியவை தாய்மார்களுக்கு பாலூட்டலை அதிகரிக்கும். ஒரு பாலூட்டும் தாய் தன்னை நன்கு நீரேற்றம் செய்து கொள்ள வேண்டும், மேலும் மலச்சிக்கலைத் தவிர்க்க போதுமான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், ”என்று உணவியல் நிபுணர் மேலும் கூறினார்.

இதை ஒப்புக்கொண்ட மருத்துவர் ஷெட்டி, பாலூட்டும் தாய்மார்கள் தினமும் குறைந்தது 4 கிளாஸ் பாலை உட்கொள்ள வேண்டும் என்றும் தண்ணீர் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தக்கூடாது என்றும் கூறினார். வெந்தய கீரை போன்ற சில உணவுகள் தாய்ப்பாலை மேம்படுத்துகின்றன. பாலூட்டும் தாய்மார்களுக்கான சமையலில் புதிய தேங்காயை நிறைய சேர்த்துக் கொள்ளவும். வெந்தயம், தாயின் பால் ஓட்டத்தை நன்கு அதிகரிக்கிறது.

மேலும், ஓட்ஸ், தினை, பிரவுன் ரைஸ், பார்லி, கொண்டைக்கடலை, முந்திரி, அக்ரூட் பருப்புகள், எள் மற்றும் ஆளி போன்ற உணவுப் பொருட்களும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் விநியோகத்தை அதிகரிக்க உதவும், என்று மிலன் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பி கௌதமி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment