Brinjal Recipes in tamil: நம்முடைய பகுதியில் எளிதில் கிடைக்கும் இந்த கத்திரிக்காய் ஏகப்பட்ட பயன்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இவை வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் போன்ற நோய்களை குணப்படுத்தும் காய்கறிகளுள் ஒன்றாகவும் உள்ளன.
கத்தரியில் காணப்படும் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கவும் உதவுகின்றன.
இப்படி நிறை ஆரோக்கிய பயன்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள கத்திரியில் எப்படி கொத்சு தயார் செய்யலாம் என இங்கு பார்க்கலாம்.
சிதம்பரம் ஸ்டைல் கத்திரிக்காய் கொத்சு செய்ய தேவையான பொருட்கள்
அரைக்க
மல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 1டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மிளகு – 1/2 டீ ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8 (கரத்திற்கேற்ப)
எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு, உளுந்து – 1/2 டீ ஸ்பூன்
கருவேப்பிலை
காய்ந்த மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 2
பூண்டு – 5
கத்தரிக்காய் – 1/2 கிலோ ( 4 துண்டுகளாக நறுக்கியது)
தக்காளி – 1 (பெரியது)
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவு (10 நிமிடங்களுக்கு ஊற வைத்தது)
கத்திரிக்காய் கொத்சு செய்முறை
அடுப்பில் ஒரு பேன் வைத்து சூடானதும் அதில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்கு வசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை நன்கு ஆற வைத்து மிக்சியில் இட்டு அரைத்து கொள்ளவும்.
இந்த மசாலாவை ஒரு டப்பாவில் அடைத்து வைத்து 6 முதல் 7 மாதங்களுக்கு பயன்படுத்தி வரலாம். தவிர, இவற்றை கார குழம்பு, மீன் குழம்பு, புளி குழம்பு ஆகிவற்றுடனும் சேர்த்து ருசிக்கலாம்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு உளுந்து சேர்த்து பொரிய விடவும். காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து கிளறிய பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
இவை ஓரளவு வதங்கிய பிறகு அவற்றோடு நறுக்கி வைத்துக்க வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் நன்கு வதங்கிய பிறகு அவற்றோடு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சாஃப்டாக வதங்கிய பிறகு அவற்றோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள் முன்னர் அரைத்து வைத்துள்ள குழம்பு தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளறிய பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி 5 நிமிடங்களுக்கு வேக விடவும்.
இவை நன்கு வெந்த பிறகு பருப்பு கடையும் கட்டையால் நன்கு மசிந்து விடவும். பிறகு முன்பு ஊற வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொள்ளவும். இவை நன்கு சுண்டிய பிறகு சாப்பாடு, இட்லி, தோசை என அனைத்திற்கும் டிஷ்ஷாக பயன்படுத்தி ருசித்து மகிழவும்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“