வீட்டிலேயே கத்திரிக்காய் வத்தல்; இப்படி செஞ்சு வச்சா ஒரு வருஷத்துக்கு கெட்டுப் போகாது

How to prepare Kathrikai Vathal in tamil: கத்திரிக்காய் உயர்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும், எடையை குறைக்கவும் நமக்கு உதவுகின்றன.

Brinjal recipes in tamil: Sun Dried Brinjal Vathal Recipe in Tamil

 Brinjal recipes in tamil:  நம்முடைய ஊர்களில் கிடைக்கும் காய்கறியில் மிகவும் அற்புதமான காய்கறியாக கத்தரிக்காய் உள்ளது. ஏனென்றால், இவை உயர்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும், எடையை குறைக்கவும் நமக்கு உதவுகின்றன. மேலும், இவை ரத்த சிவப்பு செல்களின் உற்பத்தியை ரத்தத்தில் அதிகரிக்கவும் செய்கின்றன.

இப்படி ஏகப்பட்ட நற்பண்புகளை கொண்டுள்ள கத்திரிக்காயில் சுவையான வத்தல் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கத்தரிக்காய் வத்தல் செய்யத் தேவையான பொருட்கள்

கத்தரிக்காய்
மஞ்சள் தூள்
உப்பு

கத்தரிக்காய் வத்தல் செய்முறை

முதலில் நல்ல கத்தரிக்காய்களை எடுத்து தண்ணீரில் நன்கு அலசிய பிறகு சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

அதன் பின்னர், ஒரு பாத்திரம் எடுத்து அதில் கத்தரிக்காய் வேக தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

பிறகு கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரை வேக்காடாய் வேக வைத்து கீழே இறக்கவும்.

அவை ஆற வைத்து பின்னர் ஒரு அகலமான பாத்திரம் அல்லது துணியில் வேக வைத்த கத்தரிக்காயை தொடர்ந்து 3 நாட்களுக்கு வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ளவும்.

இவற்றை நமக்கு தேவையான சமயத்தில் எண்ணெயில் பொறித்து சாதத்தோடு ருசிக்கலாம். இந்த காய வைத்த கத்தரி வத்தலை ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது சில்வர் பாத்திரத்தில் அடைத்து வைத்து பயன்படுத்தி வரலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Brinjal recipes in tamil sun dried brinjal vathal recipe in tamil

Next Story
வீட்டிலிருக்கும் உடைகள் போதும்.. நீங்களும் ஆகலாம் டிசைனர்!Latest Trendy dress designs for women Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express