பிரிட்டனில் குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண்!

இதனால் மன வருத்தம் அடைந்த அவர், ஆணாக மாற முடிவெடுத்து, அதற்குரிய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, முழுவதும் ஆணாக மாறினார்.

பிரிட்டனில் 21 வருடங்களுக்கு முன்னர் பெண்ணாக பிறந்தவர் பெய்க். பிறந்து சில வருடங்கள் கழித்து, மற்ற பெண்களை விட தான் சற்று வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தார். இதற்கான சிகிச்சை மேற்கொண்ட பொழுது, அவரின் உடலில் குரோமோசோம் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் மன வருத்தம் அடைந்த அவர், ஆணாக மாற முடிவெடுத்து, அதற்குரிய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, முழுவதும் ஆணாக மாறினார். தனது பெயரை ஹெய்டன் கிராஸ் என்றும் மாற்றிக் கொண்டார். ஆனால், கருப்பையை மட்டும் அகற்றாமல் விட்டுவிட்டார். இந்நிலையில் அவருக்கு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதின் காரணமாக, மருத்தவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

விந்து கொடை மூலம் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி, ஃபேஸ்புக் உதவியுடன் விந்து தானமாக கொடுப்பவரின் மூலம், செயற்கை முறையில் கருவுற்றார் கிராஸ். இந்நிலையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தந்தையும், சேயும் இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த கிராஸ், “என் மகள் தான் எனது ‘தேவதை’. சிசேரியன் மூலம் அவர் பிறந்தார்” என்றார். மேலும், ஃபேஸ்புக் மூலமே தான் ஸ்பெர்ம் டோனரை கண்டறிந்ததாகவும், இப்போது வெற்றிகரமாக குழந்தை பெற்றெடுத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் பீட்டி என்ற ஆண் தான், உலகில் முதன்முதலாக கடந்த 2008-ஆம் ஆண்டு குழந்தை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close