Advertisment

அஜித் பட பாடலை வைத்து அட்வைஸ் சொன்ன முதல் பெண் பைலட் காவ்யா!

'never ever give up' இந்த ஒற்றை தாரக மந்திரத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அஜித் பட பாடலை  வைத்து அட்வைஸ் சொன்ன முதல் பெண் பைலட் காவ்யா!

பல்வேறு தடைகளை தடைதெறிந்து விட்டு  முதல் பெண் பைலட் என்ற  பெருமையை பெற்ற மதுரைக்கார பொண்ணு  காவ்யா ரவிக்குமார் தனது வாழ்க்கை அனுபவத்தை பற்றி  மனம் திறந்துள்ளார்.

Advertisment

ஒரு காலத்தில், வானில் விமானம் பறப்பதை கண்டால், கிராம பகுதியில் உள்ளவர்கள், அதனை அண்ணாந்து பார்த்து கூச்சலிடுவர். அந்த நிலை மாறி, தற்போது, ஆண் பெண் பேதமின்றி யார் வேண்டுமானாலும் விமானத்தை இயக்க முடியும் என்ற சூழல் உள்ளது.  அதிலும்  நம்ம ஊரு பொண்ணு   விமானத்தை  ஓட்டுனா.. அதை வெளியில் சொல்லவே   எவ்வளவு கெத்தா இருக்கும்?

அந்த கெத்த ஓட்டு மொத்த தமிழக மக்களுக்கும் தந்தவர் தான் காவ்யா ரவிக்குமார்.  19 வயதிலேயே தொழில்முறை விமானி உரிமம் பெற்ற காவ்யா  மதுரைக்கே பெருமை சேர்க்கும் வகையில் முதல் பெண் பைலட் என்ற பெருமையை பெற்று தந்துள்ளார்.

மதுரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் காவ்யா. அரசுப் பேருந்து ஓட்டுநர் ரவிக்குமார் - கல்பனா தம்பதியின் மகளான இவர் மதுரை டி.வி.எஸ் பள்ளியில் படிக்கும்போதே தான் பைலட்டாகப் போகிறேன் என்று சக மாணவர்களிடம் கூறி வந்திருக்கிறார்.  மகளின் கனவை நனவாக்க அவரின் பெற்றோர்கள் கடன் வாங்கி பெங்களூர் அருகில் உள்ள பயணிகள் விமான பயிற்சிக் கல்லூரியில் சேர்த்தனர். அதற்காக பல லட்சங்கள் கடன்பட்டனர். பின்பு மத்திய அரசு உதவித்தொகை வழங்கியது.

முதலில் பயிற்சியாளர் துணையுடன் விமானத்தை எடுத்தவர், பின்பு தனியாக விமானத்தை ஓட்டி பாராட்டைப் பெற்றார். 200 மணி நேர பயிற்சியை முடித்து முதல்கட்டத் தேர்வில் தேறினார். தொடர்ந்து மற்ற பயிற்சிகளையும் முடித்து, தற்போது அங்கேயே பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் இவரை  ஆன்லைன் சினிமா இணையதளம் ஒன்று பேட்டி கண்டது. அந்த பேட்டியில் காவ்யா   தடைகளை தகர்த்தெறிந்த தனது வாழ்வில் முன்னேறிய  அனுபவத்தை சுவரசியமாக பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில்   காவ்யா பேசியதாவது, “ உண்மையில் பறக்கும் அனுபவம் அற்புதமானது. வர்ணனைக்கு எட்டாதது. விரிந்து பறந்த ஆகாயத்தில் தன்னந் தனிமையாய் விமானத்தை வழிநடத்திச் செல்கிற விஷயம் உன்னதமானது.

இங்கேயும் ஆண், பெண் வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் பெண் என்பதை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காமல், வேலையில் மட்டும் கவனம் செலுத்தினாலே போதுமானது. நான் என்னோடு பயிற்சிக்கு வந்தவர்களை விட, முன்னதாகவே பயிற்சியாளரோடு பறக்க ஆரம்பித்து விட்டேன். அதற்காக மறைமுகமான கேலி, கிண்டல்கள் நடக்கும். அதை எல்லாம் உதறித் தள்ளிவிட்டுத்தான் போகவேண்டும்.

உற்சாகம் தரக் கூடியது. விமானம் இயக்கும்போது நானே பறப்பதாக நினைத்துக்கொள்வேன். ஒரு பறவை போல உணர்வேன்.  வித்தியாசமான வேலையை செய்யப் போகிறோம் என்ற நினைப்பும் கொண்டவர்கள் தாராளமாக இந்தப் பணிக்கு வரலாம். முதலில் பயிற்சியாளருடன்,  என்னுடைய எண்ணமெல்லாம் விமானப் படையில் சேர்ந்து நாட்டுக்காக விமானம் ஓட்ட வேண்டும் என்பதுதான்.  'never ever give up' இந்த ஒற்றை தாரக மந்திரத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நினைத்ததை துணிவுடன் செய்யலாம்” என்று கூறியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment