இன்றும் இந்தியாவில் வாழும் தன்னின உண்ணிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

அதில் ஒருவர் எய்த அம்பு செய்தி தொகுப்பாளர் காலில் பட அதை கண்டு அவர் ஆர்பரித்தாகவும் கூறப்படுகிறது

லியோ

நாம் வாழ்கின்ற இந்த பூமி தோன்றி 5.4 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை எண்ணிலடங்கா உயிரினங்கள் தோன்றி மறைந்துள்ளன. இதுவரை தோன்றிய உயிரினங்களில் மிகவும் இளமையான உயிரினங்களில் ஒன்றாக திகழ்வது மனிதர்களாகிய நாமே. ஆம்! நாம் இந்த மண்ணில் தோன்றி 4.4 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆகின்றது. வேட்டையாடி உணவு உண்டோம், அந்த உணவை கொண்டு உடை செய்தோம். சக்கரம், வாகனம், விவசாயம் என்று குறுகிய காலக் கட்டத்தில் பல அறிவியல் சாதனைகள் மற்றும் அதீத நாகரீக வளர்ச்சியை கண்டுள்ளோம். இருப்பினும் உலகின் பல நாடுகளில் பழைய ஆதி மனிதனாகவே இன்றளவும் வாழ்ந்தும் வருகிறோம். நாம் இன்று காணவிருக்கும் ஒரு தனிப்பட்ட மக்கள் கூட்டம் பழமையும், அமானுஷ்யமும் மற்றும் அச்சுறுத்தலும் உடையதாக கருதப்படும் ஒரு மக்கள் கூட்டம்.

நாம் காணவிருக்கும் இந்த மக்கள் Sentinelese மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அப்பிரிக்காவோ அல்லது அமெரிக்க பழங்குடி மக்களோ அல்ல. இந்தியாவிற்கு மிக அருகில் வங்காள விரிகுடா கடல் பகுதிகளின் அருகே (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) தான் வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழ்ந்து வரும் மிகச் சிறிய மக்கள் கூட்டங்களில் ஒருவர்களாக இவர்கள் கருதப்படுகின்றனர். 50 முதல் 200 வரையிலான மக்கள் மட்டுமே உள்ளதாக 2001ம் ஆண்டின் இந்திய சென்சக்ஸ் கணக்கு கூறுகிறது. மேலும் 2004ம் ஆண்டு இந்தியா பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிக்கு பின் இவர்களின் ஜனத்தொகை மேலும் குறைந்துள்ளதாகவும் 2011ம் ஆண்டு கணக்கின் படி வெறும் 12 ஆண்களும் 3 பெண்களும் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.

60 கிலோமீட்டர் சுற்றளவு என்ற குறுகிய இடத்தில இவர்கள் வாழ்ந்து வந்தாலும், கரையிலிருந்து 3 கிலோமிட்டர் சுற்றளவுக்கு மேல் உள்ள சென்று இவர்களை யாரும் இதுவரை கண்டதில்லை என்பது முதல் தகவல். மேலும் 1974ம் ஆண்டு National Geographic Channelலை சேர்ந்த அறிஞர்கள் இவர்களை ஆய்வுசெய்து “Man in Search of Man” என்ற ஆவணப்படத்தை தயார்செய்ய பலத்த பாதுகாப்புடன் சென்றனர். அப்போழுது அவர்கள் சென்ற படகு பவளப்பாறையில் சிக்கவே சற்றும் எதிர்பாராத விதமாக அந்த பழங்குடி மக்கள் அங்கு வந்து கூரிய அம்புகளால் அவர்களை தாக்கினர். அதில் ஒருவர் எய்த அம்பு செய்தி தொகுப்பாளர் காலில் பட அதை கண்டு அவர் ஆர்பரித்தாகவும் கூறப்படுகிறது. அந்த படக்குழுவினர் அவர்களுக்காக கொண்டு வந்த பொருட்களை அங்கேயே வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். அந்த பழங்குடி மக்களோ அவர்கள் கொண்டுவந்த இளநீர்களை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்தனர்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, உலகின் அடர்ந்த காடுகள், நீளமான கடற்கரை கொண்ட தீவுகளில் உள்ள பழங்குடி மக்கள் பற்றிய தகவல்கள் கூட ஏராளமாய் இருக்க, ஒரு குறுகிய இடத்தில வாழும் இவர்களை பற்றிய துல்லிய தகவல்களோ, ஏன் புகைப்படங்களோ இல்லாததை கண்டு அதிர்ந்து ஆராய்ந்த போதே வெளிப்பட்டது ஒரு ரத்தம் உறையும் ஆச்சர்யம். அது அந்த மக்கள் Cannibalism என்று அழைக்கப்படும் தன்னின உண்ணிகள் என்பதே. தன்னின உண்ணிகளா? ஆம் மனிதனை மனிதனே உண்ணும் பழக்கம் கொண்ட மக்கள் கூட்டம். இந்த வகை வழக்கங்கள் கொண்ட மக்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக கருதப்படும் காலத்தில் நம் இந்திய நாட்டிற்குள்ளே இதை போன்ற ஒரு மக்கள் கூட்டம் வாழ்த்து வருவது ஆச்சர்யமே. சில ஆண்டுகளுக்கு முன் இம்மக்களின் பழமையை பாதுகாக்கவும் பொது மக்களின் நலன்கருதியும் இவர்களை அணுக இந்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sentinelese மக்களை போலவே Jarawas என்ற குறுகிய வாழ்விடம் கொண்ட மக்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகின்றனர். அரசு பல தடைகள் விதித்தாலும் அதீத ஆர்வம் கொண்ட சில சுற்றுலா பயணிகளும், தனியார் சொகுசு கப்பல் உரிமையாளர்களும் இந்த பழங்குடி மக்களை காண செல்வதாகவும் அவர்கள் சிலமுறை தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நரமாமிசம் உண்ணும் பழக்கம் கொண்ட மக்கள் என்றபோதும் இவர்களால் பொது மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் இல்லை.

பழமை என்றும் பாதுகாக்கப்படும் இதை போன்ற பல பழங்குடி மக்கள் நம்மை சுற்றி வாழ்ந்துகொண்டு தான் உள்ளனர். இவர்களை போன்ற மக்கள் கூட்டமும் உலகில் சில இடங்களிலே காணப்பட்டாலும் அவர்களும் பொது மக்களின் கண்களில் படாதவாரே வாழ்கின்றனர். அவர்களை ஆராய நினைக்காமல் அவர்கள் போக்கிலே வாழவிடுவதே நாம் செய்யவேண்டியது என்பது என் கருத்து.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close