இதை விட பெஸ்ட் ஸ்நாக்ஸ் இருக்குமா? காலிஃப்ளவர் பக்கோடா!

காலிஃப்ளவர் பக்கோடாவை செய்து உங்கள் காபியுடன் சுவையுங்கள்.

By: October 7, 2020, 7:31:24 AM

Cauliflower pakoda recipe in tamil, cauliflower pakoda : புரதம், நார்ச்சத்து மற்றும் கலோரிகள் மிகவும் குறைவான உணவை தொடர்ச்சியாக சாப்பிட்டால் தொப்பையை குறைக்கலாம். சமோசா மற்றும் பக்கோடா சாப்பிடுவதால் உடலில் கலோரிகள் அதிகம் சேரும்.

மாலை வேளையில் மொறுமொறுப்பாக டீ, காபியுடன் ஏதேனும் சாப்பிட நினைக்கும் போது, வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். மாலை நேரங்களில் என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தால் யோசிக்காமல் இந்த எளிதாக செய்யக்கூடிய காலிஃப்ளவர் பக்கோடாவை செய்து உங்கள் காபியுடன் சுவையுங்கள்.

cauliflower pakoda recipe in tamil தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 3 கப் (வேக வைத்தது)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவரைத் தவிர, அனைத்து பொருட்களையும் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் சூடானதும், அதில் காலிஃப்ளவரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், காலிஃப்ளவர் பக்கோடா ரெடி!!!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Cauliflower pakoda recipe in tamil cauliflower pakoda recipe cauliflower pakoda in tamil snacks

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X