உங்கள் கண்களை விரிய வைக்கும் பிரபலங்களின் பிரம்மாண்ட வீடுகளின் புகைப்படங்கள்!

கண்ணாடி மாளிகை போன்று ரூம்களை கட்டியுள்ளார்.

By: Updated: August 13, 2019, 05:38:24 PM

celebrities house : கோடிகளில் புரளும் திரை நட்சத்திரங்கள் கட்டி வைத்துள்ள சொகுசு வீடுகளின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ் உங்கள் பார்வைக்கு..

ஷாரூக்கான்:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் வீடு அரண்மனை மாறி இருக்கும். மும்பையில் இருக்கும் இந்த வீட்டை 13.32 கோடி கொடுத்து 2001 ஆம் ஆண்டு வாங்கினார் ஷாருக்கான். அரபிக் கடலை பார்த்தப்படி இருக்கும் இந்த வீட்டின் பரப்பளவு 2,446 சதுர கிலோமீட்டர். ஆறு மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் எல்லா அறைகளிலும் புகழ்ப்பெற்ற ஓவியங்கள் மாட்டப் பட்டிருக்கிறதாம்!

சச்சின்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் வீடு மும்பையின் பாந்தரா பகுதியில் அமைந்துள்ளது. மிகப் பெரிய பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டை பாதுகாக்கவே 50க்கும் மேற்பட்ட வேலையாட்கள் பணிபுரிகின்றனர்.

முகேஷ் அம்பானியின் 27 மாடி குடியிருப்பு.

உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் 27 மாடி குடியிருப்பு பற்றி கேள்வி படாதவர்களே இருக்க மாட்டார்கள். 3 ஹெலிஹாப்டர் இறங்கும் வசதி, 160 கார்கள் நிறுத்தும் வசதி என கோடிக்கணக்கில் செலவழித்து இந்த வீட்டை தனது மனைவியின் ஆசைக்காக கட்டி வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.

நடிகர் அமீர்கான் வீடு:

மும்பையில் இருக்கும் அமீர்கான் வீடு உட்சட்ச நடிகர்களாலும் ரசிக்கப்படும் ஒரு இடம். அமீர்கான் இந்த வீட்டை கட்டுவதற்காக சுமார் 1 வருடங்கள் திட்டமிட்டுகிறார். பல்வேறு ஊர்களில் இருந்து மிகச் சிறந்த இன் ஜீனியர்களை வரவழைத்து கண்ணாடி மாளிகை போன்று ரூம்களை கட்டியுள்ளார்.

பிரியங்க சோப்ரா:

பிரம்மாண்டத்தின் உச்சமாக சில வருடங்களுக்கு முன்பு பிரியங்கா சோப்ரா தனது அம்மாவுக்காக மும்பையில் மிகப் பெரிய வீட்டை கட்டி தந்துள்ளார். இந்த வீட்டில் தான் இவருக்கும் நிக் ஜோனஸூக்கும் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

இதுப்போன்று தினமும் விதவிதமான ஃபோட்டோ கேலரிகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் இணைந்திருங்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Celebrities house celebrities house in chennai celebrities house in mumbai actor vijay home actor suriya home

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X