Advertisment

இதுதான் டேஸ்டி சப்பாத்தி… உடல் எடை குறைய இப்படி செய்து சாப்பிடுங்க!

How to use chapati into a healthy weight loss meal? In tamil: சப்பாத்தி எடை இழப்புக்கு நல்லது. ஆனால், அவற்றை சரியான அளவில் உட்கொண்டால் மட்டுமே எடை இழப்புக்கு உதவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chapati recipes for weight loss in tamil

Chapati recipes in tamil: இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக சப்பாத்தி அறியப்படுகிறது. இவற்றை நமது அன்றாட உணவுவாக எடுத்துக்கொண்டால் நமது உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக எடை இழப்பில் சப்பாத்தி பெரும் பங்காற்றுகிறது.

Advertisment

நாம் ஆரோக்கியமாக இருக்க உணவுப் பட்டியலை திட்டமிடும்போது, ​​​​நம்மில் பெரும்பாலோர் சப்பாத்தி மற்றும் சாதம் போன்ற அத்தியாவசியப் உணவுப் பொருட்களைத் தவிர்த்துவிடுகிறோம். ஏனெனில், கார்போஹைட்ரேட்டுகளை குறைப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்ற கருத்துகள் உலவி வருகின்றன. ஆனால் அது உண்மையில் உதவுகிறதா? அல்லது அது ஒரு கட்டுக்கதை தானா? என்பதை குறித்தும், சப்பாத்தி எப்படி நமது எடை இழப்புக்கு உதவுகிறது என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம்.

publive-image

சப்பாத்தி

சப்பாத்தியை ஆரோக்கியமான எடை இழப்பு உணவாக மாற்றுவது எப்படி?

கோதுமை சப்பாத்திகளில் நார்ச்சத்து இருப்பது அரிசியை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இது எடை இழப்புக்கு நல்லது. ஆனால், அவற்றை சரியான அளவில் உட்கொண்டால் மட்டுமே எடை இழப்புக்கு உதவும்.

ஒரு நபருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 28-30 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகிறது. இது ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு போதுமானது. சுவாரஸ்யமாக, 1 கோதுமை சப்பாத்தி யில் சுமார் 0.4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் உடலுக்கு சரியான நார்ச்சத்தை அளிக்கும். இருப்பினும், நீங்கள் சிறிது எடையைக் குறைக்க திட்டமிட்டால், உங்கள் உணவில் நார்ச்சத்து உட்கொள்வதை அதிகரிப்பது செரிமான அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதன் மூலம் இயற்கையாகவே எடையைக் குறைக்க உதவும்.

சமைக்கும் முறையை மாற்றுவதன் மூலம் உங்கள் வழக்கமான கோதுமை சப்பாத்தியை நார்ச்சத்து நிறைந்ததாக மாற்றலாம். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான மாவுகளான ராகி மற்றும் பிற தானியங்களைச் சேர்ப்பதன் மூலம் நார்ச்சத்து அதிகரித்து, உங்கள் வழக்கமான சப்பாத்தியை ஆரோக்கியமான எடை இழப்பு உணவாக மாற்றலாம்.

publive-image

சப்பாத்தி

மேலும், கோதுமை மாவுடன் 1:1 என்ற விகிதத்தில் மல்டிகிரைன் மாவு கலந்து கொண்டால் உங்கள் தினசரி உணவில் நார்ச்சத்து அதிகரிக்கும்.

இறுதியாக, நீங்கள் ஸ்டஃப் செய்யப்பட்ட சப்பாத்திகளை விரும்புகிறீர்கள் என்றால், துருவிய கேரட், முள்ளங்கி, ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற புதிய காய்கறிகளைச் சேர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சப்பாத்திகளில் நார்ச்சத்து அதிகரிக்க, பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இது உங்கள் சப்பாத்தியை கனமானதாக மாற்றும் மற்றும் நீண்ட நேரத்திற்கு உங்கள் பசியை தாங்க உதவும்.

உடல் எடையை குறைக்க சப்பாத்தி சாப்பிடுவது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

"சப்பாத்தி நல்லது என்பது முற்றிலும் தவறான கருத்து. அரிசியின் கிளைசெமிக் குறியீடு கோதுமையை விட சற்றே அதிகமாக இருந்தாலும், அரிசி சப்பாத்தியை விட குறைவான கலோரிகளையும் அதிக திருப்தியையும் தருகிறது. ஏனெனில் அரிசியுடன் உங்கள் பசியைப் போக்க தேவையான அளவு கோதுமையை விட மிகக் குறைவு. நீங்கள் அரிசியை வேகவைக்கும்போது விரிவடைந்து அளவு அதிகரிப்பதால் நீங்கள் குறைவாகவே சாப்பிடுகிறீர்கள்.

publive-image

சப்பாத்தி

ஊட்டச்சத்து ரீதியாக கோதுமை அரிசியை விட சற்றே அதிக அளவில் சில தாதுக்களைக் கொண்டிருப்பதாலும், முழு கோதுமையில் அதிக நார்ச்சத்து உள்ளதாலும், கலோரிகள் மற்றும் எடை குறைப்பு அடிப்படையில் நீங்கள் குறைவாக உட்கொள்வதால் அரிசி சாதம் சிறப்பாக செயல்படும்." என உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ரோஹித் ஷெலட்கர் கூறுகிறார்.

உங்கள் வழக்கமான சப்பாத்தியை எப்படி ஆரோக்கியமாக செய்யலாம்?

உங்கள் சப்பாத்தியை மிகவும் ஆரோக்கியமானதாக மாற்ற, ஓட்ஸ், பாதாம், தினை (ஜோவர்) அல்லது ராகி போன்ற ஆரோக்கியமான மாவுகளை எப்போதும் மிக்ஸ் செய்து கொள்ளவும். இருப்பினும், அவற்றை சிறிய விகிதத்தில் கலப்பது நல்லது.

உங்கள் சப்பாத்தியில் உள்ள கொழுப்பைக் குறைக்க விரும்பினால், வெண்ணெய், நெய் போன்ற பால் கொழுப்புகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

பல தானிய மாவு அல்லது ராகி அல்லது நாச்சினி போன்ற முழு தானிய மாவுகளைப் பயன்படுத்துவது சப்பாத்தியின் கலோரி உள்ளடக்கத்தைக் குறைக்க உதவும்.

கடைசியாக, நீங்கள் உண்ணும் சப்பாத்திகளின் அளவை எப்போதும் சரிபார்க்கவும்.

publive-image

சப்பாத்தி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Chapati Tamil Food Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment