நாம் தினமும் வீட்டில் சமைக்கிறோம். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சமைக்கிறோம். வேலையை எளிதாக்கும் வகையில் சில வீட்டு உபயோக டிப்ஸ் பற்றி இங்கு பார்ப்போம்.
சப்பாத்தி நல்ல மென்மையாக வர சப்பாத்தி மாவுடன் சிறிது வேக வைத்த உருளைக் கிழங்கையும், சிறிதளவு பாலையும் சேர்த்து பிசைந்து தயார் செய்தால் சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.
கொத்தமல்லி பொடி செய்யலாம். அதற்கு கொத்தமல்லி தழை, புதினா வாடி விட்டால் அவற்றை தூக்கி எறிந்துவிடாமல் மிக்ஸியில் அரைத்துப் பொடி செய்து காய்கறி வதக்கும் போது தூவி இறக்கினால் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும்.
அதே நேரம் சாதம் குழைந்து போய் விட்டால் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி அடுப்பை சிறு தீயில் சிறிது நேரம் வைத்துவிட்டு வடித்தால் சாதம் குழையாமல் கொஞ்சம் பதமாக இருக்கும்.
உருளைக் கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு முன் உருளைக் கிழங்கை சீவி தண்ணீரில் ஊறப்போட்டு கழுவ வேண்டும். பின்பு மோரில் சிறிதுநேரம் ஊற விட்டு வடித்து எடுத்து பொரித்தால் சிப்ஸ் கடையில் வாங்குவது போல் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“