Advertisment

உணவில் உப்பு கூடிவிட்டால் என்ன செய்வது? செஃப் தாமு சிம்பிள் சீக்ரெட்

இங்கு பாரம்பரிய மற்றும் நவீன சமையலில் நிபுணத்துவம் பெற்ற பிரபல செஃப் தாமு பகிரும் சில சமையல் ஹேக்ஸ் உள்ளது.

author-image
WebDesk
New Update
Kitchen tips

Tips rectify excess salt and soreness your dish

நம் அனைவருக்கும் கிச்சனில் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சிறப்பாக இருந்தாலும், பல நாட்கள் மோசமாகி விடுகின்றன. சில நேரங்களில் சில அடிப்படை விஷயங்களை, சரியான முறையில் செய்யாவிட்டால், அது முழு உணவையும் கெடுத்துவிடும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? பதற்றத்தில் முழு உணவையும் வீணாக்குவதற்குப் பதிலாக, சில பயனுள்ள சமையல் ஹேக்குகளை முயற்சிக்கவும்!

Advertisment

இங்கு பாரம்பரிய மற்றும் நவீன சமையலில் நிபுணத்துவம் பெற்ற பிரபல செஃப் தாமு பகிரும் சில சமையல் ஹேக்ஸ் உள்ளது. அடுத்தமுறை நீங்கள் சமைக்கும் போது, உங்கள் உணவில் உப்பு கூடிவிட்டால் அல்லது புளிப்பு அதிகமானால் செஃப் தாமுவின் இந்த குறிப்புகளை முயற்சிக்கவும்.

உங்கள் உணவில் உப்பு கூடிவிட்டால் என்ன செய்வது?

publive-image

இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ½ டீஸ்பூன் கொத்தமல்லி தூள், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து உணவில் சேர்க்கவும். உப்பு குறைந்துவிடும்.

புளிப்பைக் குறைப்பது எப்படி?

publive-image

உங்கள் உணவில் புளிப்புத்தன்மையை சமன் செய்ய ஒரு சில நசுக்கிய பச்சை மிளகாயைச் சேர்க்க வேண்டும்.

இதையும் முயற்சி பண்ணுங்க

கீரை சமைக்க

publive-image

சமைக்கும் போது கீரைகள் நிறம் மாறாமல் இருக்க,  முதலில் அவற்றை வெதுவெதுப்பான நீரில் நனைக்கவும், பின்னர் ஐஸ் தண்ணீரில் வைக்கவும்.

கேரட்

publive-image

பச்சை கேரட் விட, சமைத்த கேரட்டில் தான் கரோட்டினாய்டு அதிகமாக இருக்கும். இந்த காய்கறியை நீங்கள் முழுமையாக அனுபவிக்க விரும்பினால், அதை சமைத்து சாப்பிடுவதே சிறந்த வழி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment