Advertisment

ஆரோக்கியம் நிறைந்த தாமரைத் தண்டு.. எப்படி வாங்குவது, சுத்தம் செய்வது, வெட்டுவது?

தாமரைத் தண்டு’ எப்படி வாங்குவது, சுத்தம் செய்வது, வெட்டுவது என்பது குறித்து, செஃப் சரண்ஷ் கோயிலா பகிரும் முழுமையான வழிகாட்டி இதோ!

author-image
WebDesk
New Update
Kitchen Tips

Chef shares easy tips to buy clean chop lotus stem

ஒரு உணவைத் தயாரிப்பது என்பது சமைப்பது மட்டுமல்ல, காய்கறிகளை வாங்குவது, சுத்தம் செய்வது மற்றும் நறுக்குவது, ஆகியவையும் அடங்கும்.

Advertisment

சில காய்கறிகளை சுத்தம் செய்வதற்கும், நறுக்குவதற்கும் நேரம் எடுப்பதில்லை, ஆனால் அதேநேரம், இன்னும் சில காய்கறிகளை சுத்தம் செய்ய நீங்கள் மெனக்கெட வேண்டும். அதில் ஒன்றுதான் தாமரை தண்டு. இது இந்திய உணவு வகைகளில் கறி, கோஃப்தா உட்பட பலவகையான உணவுகளை தயாரிக்க பயன்படுகிறது.

தாமரை தண்டு ஊட்டச்சத்துக்களின் சக்தியாக அறியப்படுகிறது. இதில், உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தேவையான வைட்டமின் சி நிறைந்துள்ளது; இதன் வைட்டமின் பி மன அழுத்தம் மற்றும் எரிச்சலைக் குறைக்க நல்லது; உணவு நார்ச்சத்து’ உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும். மேலும், இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

தாமரைத் தண்டு’ எப்படி வாங்குவது, சுத்தம் செய்வது, வெட்டுவது என்பது குறித்து, செஃப் சரண்ஷ் கோயிலா பகிரும் முழுமையான வழிகாட்டி இதோ

தாமரைத் தண்டு வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டியது என்ன?

தாமரைத் தண்டுகள் இருபுறமும் மூடப்பட்டிருப்பதை பார்த்து வாங்கவும். அதனால் தண்டுக்குள் சேறு இல்லாமல் இருக்கும். ஒருவேளை, ஒரு பக்கம் திறந்திருந்தால், திறந்த துளைகள் காரணமாக அதனுள் சேறு குவிந்திருக்கும்.

அதை எப்படி சுத்தம் செய்வது?

இரு முனைகளையும் நறுக்கவும். ஒரு பீலரைப் பயன்படுத்தி தண்டை உரிக்கவும், அனைத்து நார்ச்சத்துள்ள தோல்களும் வெளியே வருவதை உறுதி செய்யவும். முடிந்ததும், அதை நன்கு கழுவவும்; தண்டின் துளைகளுக்குள் தண்ணீர் அடிப்பதும் இதில் அடங்கும்.

இப்போது தாமரை தண்டை, சாய்வான கோணத்தில் வெட்டவும். அதற்குக் காரணம், "தாமரை தண்டு முடிகள் நிறைந்தது, அதை நேராக வெட்டுவது கடினமாக இருக்கும், அதே நேரத்தில், அது நன்றாக சமைக்காது" என்று கோயிலா விளக்கினார்.

தண்டை சிறியதாக’ அல்லது பெரிய துண்டுகளாக வெட்டுவது முற்றிலும் உங்களுடைய விருப்பம்.

இன்னும் தண்டுகளுக்குள் அழுக்கு இருந்தால் என்ன செய்வது?

ஒரு டூத்பிக், அல்லது ஒரு காட்டன் பட்ஸ் மூலம் சுத்தம் செய்யவும் அல்லது துண்டுகளை வெதுவெதுப்பான நீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டவும். தாமரை தண்டு துண்டுகளை வெளியே எடுக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment