Advertisment

மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க.. செஃப் சொல்லும் ரகசியம்!

செஃப் குணால் கபூர் பகிரும் சில குறிப்புகள், அடுத்த முறை நீங்கள் மாம்பழங்களை வாங்க வெளியே செல்லும்போது புத்திசாலித்தனமான முடிவை எடுக்க உதவும்.

author-image
WebDesk
New Update
Kitchen Tips

Chef shares tips to keep in mind while you purchasing mangoes

மாம்பழ சீசன் இப்போது தொடங்கியுள்ளது, சந்தைகளில் அல்போன்சா, சௌசா, தாஷேரி, பாதாமி மற்றும் லாங்க்ரா போன்ற பலவகை மாம்பழங்கள் நிரம்பி வழிகின்றன.

Advertisment

இந்த இனிப்பு சுவையை அனுபவிக்க மக்கள் ஒரு வருடம் முழுவதும் காத்திருக்கிறார்கள். இருப்பினும், சுவையற்ற அல்லது பழுக்காத மாம்பழத்தை வாங்கும்போது நாம் அடிக்கடி ஏமாந்து விடுகிறோம்.

publive-image

செஃப் குணால் கபூர்

இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க, செஃப் குணால் கபூர், அடுத்த முறை நீங்கள் மாம்பழங்களை வாங்கச் செல்லும்போது, ​​ஸ்மார்ட்டாக முடிவெடுக்க உதவும் சில சூப்பர் எளிதான குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பகிர்ந்துள்ளார்.

"இது மாம்பழ சீசன் மற்றும் புதிய சுவையான மாம்பழங்களை எப்படி வாங்குவது என்பது தெரிந்திருக்க வேண்டும். மாம்பழத்தின் தண்டு இனிப்பாகவும், நன்றாகவும் இருந்தால், மாம்பழம் பழுத்திருக்கிறது, எனவே நீங்கள் அதை தாரளமாக வாங்கலாம்,'' என்றார்.

இருப்பினும், "கருப்பு மற்றும் பழுப்பு நிற புள்ளிகளைக் கொண்ட மாம்பழங்களைத் தவிர்க்க வேண்டும்".

மாம்பழத்தை அதன் நிறத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. "சில பச்சை மாம்பழங்கள் இனிமையாக இருக்கும், அதே சமயம் ஆழமான மஞ்சள் நிறத்தில் இருக்கும் சில சுவையற்றதாகவோ அல்லது புளிப்பாகவோ இருக்கும்".

மாம்பழத்தை வாங்கும் போது விற்பனையாளரிடம் மாம்பழத்தின் வகையைப் பற்றி விசாரிக்க வேண்டும். இப்படி செய்வதால் "ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், அவற்றின் சுவையின் அடிப்படையில் பல்வேறு வகைகளை வேறுபடுத்த நீங்கள் கற்றுக்கொள்வீர்கள் என்று சமையல் நிபுணர் குணால் அறிவுறுத்தினார்.

மாம்பழ சீசன் மிக விரைவாகவே கடந்து செல்கிறது, ஆனால் மக்கள் இன்னும் அதிகமாக அனுபவிக்க ஏங்குகிறார்கள். இந்த இக்கட்டான நிலையைத் தீர்க்க, செஃப் குணால் ஒரு சுலபமான தீர்வைக் கொடுத்துள்ளார் - சீசன் முடிந்த பிறகும் பல மாதங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய மாம்பழ ரெசிபிகளை உருவாக்குங்கள்.

“ஒரு மாம்பழ ப்யூரி செய்து, ஆறிய பிறகு ஆழமாக உறைய வைக்கவும். கிட்டத்தட்ட 5-6 மாதங்களுக்கு இந்த ப்யூரியை நீங்கள் அனுபவிக்க முடியும்,”என்று அவர் கூறினார்.

என்ன! மாம்பழம் வாங்க போறீங்களா? செஃப் சொன்ன குறிப்புகளை மறக்காம நியாபகத்துல வச்சுக்கோங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment