Advertisment

ஷ்ரேயா முதல் துர்கா ஸ்டாலின் வரை.. சுந்தர் ராமுவின் 365 நாள்கள் டேட்டிங் பிளான்!

Chennais Sunder Ramu the Man on a mission of 365 dates Tamil News "கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நாடு" என்று கூறுவதை தொடர்புப்படுத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennais Sunder Ramu the Man on a mission of 365 dates Tamil News

Chennais Sunder Ramu the Man on a mission of 365 dates Tamil News

Chennais Sunder Ramu the Man on a mission of 365 dates Tamil News : 'மயக்கம் என்ன' உட்பட சில தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தவர் சுந்தர் ராமு. நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், இவர் முழுநேர ஃபேஷன் போட்டோகிராபர். நடிப்பு மற்றும் போட்டோஷூட்டிற்கு இடையே 2015-ம் ஆண்டு முதல் இவர் செய்து வரும் மற்றொரு விஷயம், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நபருடன் 'டேட்டிங்' செல்வது.

Advertisment

கடந்த சில ஆண்டுகளில், அவர் மொத்தம் 335 டேட்டிங் சென்றிருக்கிறார். எனினும், அவர் அடைய விரும்பும் மந்திர எண் 365. ஆம், "நான் 365 பெண்களுடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன்" என்று சுந்தர் பெருமையுடன் கூறுகிறார். அது எப்படி சாத்தியம்? ஒரு பெண்ணை டேட்டிங் கூப்பிடவே தயங்குகிற நம் ஊரில், இவரால் மட்டும் எப்படி முடிகிறது என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனால், இவர் சொல்வது உண்மையான டேட்டிங்.

வழக்கமாக டேட்டிங் என்றால் அதற்கு ஒரேயொரு விதிமுறைதான். அது என்னவென்றால், பெண்கள்தான் வெளியே எங்குச் செல்லவேண்டும் என்கிற இடத்தைத் தேர்வு செய்யவேண்டும். மிக முக்கியமாக, சாப்பாட்டுக்கு அவர்கள்தான் பணம் செலுத்த வேண்டும்.

365 பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்ற சுந்தரின் யோசனை ஒருவர் எதிர்பார்ப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அவர் தனது வாழ்க்கையில் "எப்போதும் அன்பைத் தேடுகிறார்" என்று கூறினாலும், அவருடைய நோக்கம் அன்பைக் கண்டுபிடிப்பது அல்ல, ஆனால் நாட்டில் உள்ள சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு பெரிய பணியின் சிறிய பகுதி. மேலும், இந்தியாவில் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் மேற்கொள்ளும் சிறு முயற்சி.

"365 உணவு டேட்ஸ்" திட்டத்தின் பின்னணியில் உள்ள யோசனை

பெங்களூரில் பிறந்த சுந்தர், பாலின பாகுபாடு இல்லாமல், பெண்களை மரியாதையுடன் நடத்தும் மிகவும் முன்னோக்கு சிந்தனை கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பயிலச் சென்னை சென்றிருக்கிறார்.

"பெங்களூரில் இருந்து சென்னைக்கு நகர்ந்து இங்கிருக்கும் நிஜ உலகத்திற்குள் நுழைவது என்பது எனக்கு ஒரு பெரிய கலாச்சார அதிர்ச்சியாக இருந்தது. நம் சமூகத்தில் பாலின வேறுபாடு எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை நான் பார்த்தேன்” என்று சுந்தர் கூறுகிறார்.

2012-ம் ஆண்டின் டெல்லி பாலியல் பலாத்காரம் பற்றிப் படித்த போதுதான், சுந்தர் எதையாவது தன்னால் முடிந்த மாற்றத்தைச் செய்ய விரும்பினார்.

"டெல்லி கேங் ரேப் என்னை உலுக்கியது. எனக்குப் பல தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்தன. மக்கள், மக்களைப் பற்றிக் கவலைப்படாவிட்டால், அவர்கள் காலநிலை மாற்றம் அல்லது விலங்குகளின் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் என்பதை நான் உணர்ந்தேன்" என்கிறார் சுந்தர்.

சுந்தர் ஒவ்வொரு முறையும் அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது, ​​வெளிநாட்டவர்கள் இந்தியாவை "பெண்களை மோசமாக நடத்தும் நாடு" அல்லது "கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நாடு" என்று கூறுவதை தொடர்புப்படுத்தினார்.

சுந்தர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாக முடிவு செய்தார். "இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்வது அரசாங்கத்தின் NGO-களின் வேலை என்று நினைத்து விட்டுவிடுகிறோம். ஆனால், என்னால் எப்படி ஒரு வித்தியாசத்தை உருவாக்க முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘365 உணவு டேட்ஸ்’ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. பெண்களைச் சந்தித்து இதைப்பற்றிய விழிப்புணர்வு உரையாடல்களைத் தொடங்க முடிவு செய்தேன்" என்று அவர் கூறினார்.

publive-image

"365"-ன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகையில், "நீங்கள் மாற்றத்தை உருவாக்க விரும்பினால், ஒவ்வொரு நாளும் நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்கள் மற்றும் வேலை செய்கிறீர்களோ, அதேபோல நீங்கள் ஒவ்வொரு நாளும் இந்த மாற்றத்திற்காகவும் வேலை செய்ய வேண்டும்" என்று குறிப்பிடுகிறார்.

டிசம்பர் 31, 2014 அன்று தனது பேஸ்புக்கில் 365 உணவு டேட்ஸ் திட்டத்தைப் பற்றி சுந்தர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய முதல் டேட்டிங் ஜனவரி 1, 2015 அன்று, அவருடைய நெருங்கிய நண்பருடன் இருந்தது. "என் நண்பர் என்னை மதிய உணவிற்கு அவருடைய வீட்டிற்கு அழைத்து எனக்காக சமைத்துக் கொடுத்தார். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். நீண்ட காலமாக அவரை அறிந்திருந்தும், எனக்கு முன்பு தெரியாத விஷயங்கள் பலவற்றை நான் அறிந்துகொண்டேன்" என்று சுந்தர் கூறினார்.

சுந்தரின் டேட்டிங் செயல்முறை

டேட்டிங் செல்லும் போது, ​​சுந்தர் மூன்று விதிகளைப் பின்பற்றுகிறார். அதாவது, இந்த டேட்டிங் ஒரு நோக்கத்திற்காக செயல்படுகிறது என்று அவர் முதலில் வெளிப்படுத்த மாட்டார். பெண்தான் அவர்கள் சந்திக்கும் இடத்தை தீர்மானிக்க வேண்டும். மற்றும் அவர்கள் உண்ணும் உணவிற்கு அந்தப் பெண்தான் பணத்தை செலுத்த வேண்டும்.

"ஒரு பெண்ணுடன் இருக்கும்போது, அவர்கள் உண்ணும் உணவிற்கு ஆண் காசோலையை செலுத்தும்போது அவன் சிறந்த தகுதியும் சக்தியும் உள்ள ஒரு உலகில் நாம் வாழ்கிறோம் என்கிற எண்ணம் வந்து விடுகிறது. டேட்டிங் செல்லும் போது எப்போதுமே ஆண் ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. நான் அந்த ஸ்டீரியோடைப்பை உடைக்க விரும்பினேன்” என்கிறார் சுந்தர். அவர் டேட்டிங்கின் போது சேமிக்கும் பணம் தொண்டு நிறுவனங்களுக்கு உணவு வாங்கப் பயன்படுகிறது.

சுந்தருக்கான முதல் 20 டேட்டிங், அவருடைய நண்பர்களுடன் மட்டுமே இருந்தன. பத்திரிகைகள் அவருடைய இந்த சுவாரசிய கதையை வெளியிட்ட பிறகு அவர் அதிக கவனத்தைப் பெற்றார். மேலும், "the serial dater" மற்றும் "டேட்டிங் கிங்" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

சுந்தருக்கு, வயது, தொழில், சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலைகள் போன்றவை டேட்டிங்கிற்கு பொருத்தமற்றவை. "யார் வேண்டுமானாலும் என்னுடன் பழகலாம். அவர்கள் தகுதியானவர்களா என்று யாரும் என்னிடம் கேட்கத் தேவையில்லை" என்று அவர் கூறுகிறார்.

நடிகை ஷ்ரியா சரண், நடனக் கலைஞர் ருக்மணி விஜயகுமார் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் முதல் அவருடைய 109 வயது பாட்டி மற்றும் 90 வயது கன்னியாஸ்திரீ வரை, அனைவருடனும் உணவு டேட்டிங் சென்றுள்ளார் சுந்தர்.

அதுமட்டுமின்றி, பாரிஸ், வியட்நாம், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்களுடனும் சுந்தர் டேட்டிங் செய்துள்ளார். வெளிநாட்டில் ஒரு பெண்ணை அணுகுவது மிகவும் எளிதானது என்று ஒப்புக்கொண்டாலும், இந்தியாவில் அவருக்குக் கிடைத்த சில சிறந்த அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.

"ஒருவரிடம் சென்று, என்னோடு டேட்டிங்கிற்கு வருவீர்களா? என்று கேட்பது, சாப்பாட்டுக்குப் பணம் கொடுப்பீர்களா என்று கேட்பது போல சுலபமல்ல. இது சென்னையில் தர்பூசணி ஜூஸ் விற்பனையாளரான 60 வயதான கிருஷ்ணவேணியுடன் நிச்சயமாக இல்லை. நான் அவரிடம் சென்று ஜூஸை இலவசமாகத் தரும்படி கேட்டபோது, ​​அதற்கு அவர் ஆரம்பத்தில் என்னைப் பார்த்து சிரித்தார். பிறகு அவர் என் கோரிக்கையை ஒப்புக்கொள்ள வைப்பதற்கு சிறிது நேரம் ஆனது. ஆனால், அதன் பிறகு எங்களுடைய உரையாடல் மதிப்புக்குரியது" என்கிறார் சுந்தர்.

publive-image

சென்னையில் உள்ள ஒரு கான்வென்ட்டில் 90 வயதான அயர்லாந்து கன்னியாஸ்திரி சகோதரி லோரெட்டோவுடன் அவர் உணவைப் பகிர்ந்து கொண்ட டேட்டிங் பற்றியும் பகிர்ந்துகொண்டார். அவருடைய அனைத்து டேட்டிங்கும் விசேஷமானது என்று அவர் உணர்ந்தாலும், இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்த அவருடைய 109 வயது பாட்டியுடன் சென்ற டேட்டிங்கிதான் சிறந்தது என்று குறிப்பிடுகிறார். "என் வாழ்நாள் முழுவதும் நான் அவரை அறிந்திருந்தாலும், நான் அவருடன் தனியாக அதிக நேரம் செலவழித்தது அதுவே முதல் முறை. நாங்கள் பேசிய உரையாடல்கள் என்றென்றும் நினைவில் இருக்கும்" என்கிறார்.

சமத்துவத்தை நோக்கி உரையாடல்களை வழிநடத்துதல்

இந்த திட்டம் தனக்கு நிறையப் பெண்களைத் தெரியும் என்று காட்டும் ஒரு வழி போலத் தோன்றுமோ என்று சுந்தர் தனக்குள்ளேயே அடிக்கடி கேட்டுக்கொள்கிறார். அவருடைய நண்பர்கள் உட்பட மக்கள் அவரை ஒரு பிளேபாய் என்றே அழைத்தனர்.

என்றாலும், "மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல. ஒரு உரையாடலைத் தொடங்குவது, கேள்விகளைக் கேட்பது மற்றும் மற்றொரு நபரின் பார்வையைப் பெறுவது மட்டுமே இதன் நோக்கம். பாலின சமத்துவத்தை அடைவதே என்னுடைய இறுதி நோக்கம் "என்கிறார் சுந்தர்.

இந்த டேட்டிங்கில் வெளியே செல்வதற்குப் பின்னால் தன்னிடம் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை என்று சுந்தர் உறுதியாகக் கூறுகிறார். "இது பெண்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக நான் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதால், அவர்கள் என் டேட்டிங்கில் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொள்கிறார்கள்" என்கிறார். மேலும், சுந்தர் தனது ஒவ்வொரு டேட்டிங்கையும் மற்ற நபரின் அனுமதியுடன் ஆவணப்படுத்துகிறார். அதற்கு, "நான் ஒரு பிளேபாயாக இருந்தால், அதை ஆவணப்படுத்துவதில் நான் இவ்வளவு வெளிப்படையாக இருக்கமாட்டேன்" என்று கூறுகிறார்.

ஒரு மனிதனாக இருந்து கொண்டு வரும் சலுகையின் காரணமாக மட்டுமே இந்த திட்டத்தைச் செயல்படுத்த முடிந்ததா என்று சுந்தரிடம் IndianExpress.com கேட்டபோது, ​​"நான் தகுதியானவன் என்பதை 100% ஒப்புக்கொள்கிறேன்" என்றார்.

"ஆனால், அது பற்றிய உரையாடல்களிலிருந்தும் அதற்கான தீர்வுகளைத் தேடுவதிலிருந்தும் என்னைத் தடுக்கக்கூடாது" என்றும் அவர் கூறுகிறார். "ஆண்களால்தான் பிரச்சினை. ஆனால், ஆண்களும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிடுகிறார். பாலின சமத்துவம் என்பது பெண்களின் சமத்துவத்திற்கு மட்டுமல்ல, திருநங்கைகள் மற்றும் பைனரி அல்லாத சமத்துவத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டதாக சுந்தர் நம்புகிறார்.

ஒரு வருடத்தில் 365 பெண்களுடன் பழகுவதே குறிக்கோளாக இருந்தபோதிலும், 2015 நவம்பரில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால், அவர் 2015-ல் 335 பெண்களோடு நிறுத்தினார். அதன் பிறகு, அவர் அதை மீண்டும் தொடங்கினாலும், மெதுவாக எடுத்துச் எல்லா முடிவு செய்தார்.

"நான் செய்ய முயன்ற இந்த நோக்கத்தை முன்வைத்து பெரிய பணியை நோக்கிச் செல்ல முடிவு செய்தேன்" என்று சுந்தர் கூறுகிறார். "என்னுடைய அடுத்த படி அனைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உரையாற்றுவது மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றி அவர்களுக்கு உணர்த்துவது. இந்த பிரச்சினைகள் வரும்போது மக்களின் மனநிலையை மாற்ற விரும்புகிறேன்" என்கிறார்.

அதுமட்டுமின்றி, டாக்ஸி/ஆட்டோ டிரைவர்கள் மற்றும் டெலிவரி நபர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுந்தர் ஒரு திட்டத்தைத் திட்டமிடுகிறார். ஏனெனில், அவர்கள் பாலின பிரச்சினைகளைக் குரல் கொடுக்க உதவும் ஒரு பெரிய சமூகத்தை உருவாக்குகிறார்கள் என்று சுந்தர் நம்புகிறார்.

தற்போது ஒரு மணிநேர ஆவணப்படத்தில் பணிபுரிந்து வரும் சுந்தர், தன்னுடைய டேட்டிங் அனுபவத்தையும் அதன்மூலம் அவர் சந்தித்த பெண்களின் பார்வைகளையும் புத்தகமாக எழுதி ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். சுந்தர், அவர் செய்த மாற்றம் மிகச் சிறிய ஒன்று என்று நம்புகிறார்.  என்றாலும் இது ஒரு சிறிய ஆரம்பம் என்று உறுதியாக நம்புகிறார்.

"பாலின சமத்துவமின்மை பிரச்சினை தலைமுறைகளை சரிசெய்யும். ஆனால், இன்று நான் முயற்சி செய்வதை அது தடுக்கவில்லை. நான் குறைந்தபட்சம் இன்று ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முயன்றால், ஒருவேளை நாளை, வேறு யாராவது உத்வேகம் பெற்று, பொறுப்பேற்று ஒரு நல்ல நாளிற்காக வேலை செய்வார்கள்” என்று கூறி நிறைவு செய்கிறார் டேட்டிங் கிங் சுந்தர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Durga Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment