Advertisment

கிறிஸ்துமஸ் பரிசுகள்: கடைசி நிமிட ஷாப்பிங்கா? இதோ சில டிப்ஸ்

Christmas Gift Ideas for Kids in Tamil: மற்றுமொரு பாதுகாப்பான பரிசுப்பொருட்கள் பட்டியலில் கை கடிகாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Christmas Gift Ideas 2018

Christmas Gift Ideas 2018

கிறிஸ்துமஸ் தினம் கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது . இதனை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பாரம்பரிய பழக்கப்படி தவறாமல் கொண்டாடுவார்கள். இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் என்று கி.பி. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்ற மதப் போதகரால் அறிவிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாப்பட்டதாக கி.பி 354ம் ஆண்டைச் சேர்ந்த பிலோகலஸ் நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

ரோம் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியும் ஒளியும் கொண்டுவந்ததாகவும் இதனை கத்தோலிக்க திருச்சபை இறைக்காட்சி விழா என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ்தான். குழந்தைகளுக்கு குதூகுலம் தருபவர் இந்த கிறித்துமஸ் தாத்தா. இனிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி தந்து அவர்களை உற்சாகப்படுத்துவார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை வந்ததும் வீடுகளை சுத்தம் செய்கின்ற நாம் ஆனால், நம் ஆன்ம வீட்டை முற்றிலும் மறந்துவிடுகிறோம். கிறிஸ்துமஸ் தினத்தன்று நம்முடைய ஆன்ம வீட்டை சுத்தம் செய்து அதிலும் ஒரு குடில் அமைத்து பாலன் இயேசுவை வைத்து அழகு பார்க்க வேண்டும் .

அதற்கு அடுத்தப்படியாக பரிசுப் பொருட்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று குழந்தைகள் ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருப்பது பரிசுப் பொருட்களுக்கு தான். சரி இந்த ஸ்பெஷல் டேவில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பரிசுப் பொருட்களை கொடுக்கலாம்? என்று யோசிக்கிறீர்களா?

Christmas Gift Ideas for Kids in Tamil: இதோ உங்களுக்காக சூப்பர் ஐடியாக்கள்..

1. காஃபி மக்:

நம் கதைகளையும் நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்ள அவர்கள் இல்லை என்றால் வாழ்க்கை எவ்வளவு போராக இருக்கும், இல்லையா? சரி, நீங்கள் உங்கள் பிள்ளைகளை அதிகமாக நேசித்தால் அவர்களுக்கு, பிடித்தமாறு காஃபி மக் ஒன்றை பரிசாக வழங்குகள். அதில் என்னவெல்லாம் வரைந்து இருக்கலாம். கடையில் இருந்து ஃபார்எவர் காஃபி மக்கை அவர்களுக்கு பரிசளித்தால் ஒவ்வொரு நாள் காலையிலும் உங்களை நினைத்து காஃபி குடிப்பார்கள்.

2. ஹார்ட் பட்டேர்ன் ஸ்வெட்டர்

மென்மையான ஸ்வெட்டர் அணிவது டிசம்பர் மாதத்திற்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. வெள்ளை மற்றும் சிவப்பு பஃர்ரி ஸ்வெட்டரில் சாண்டா கிலாஸ், ஜிங்கிள்பெல்ஸ் அல்லது அவர்களுக்கு பிடித்தவகையில் ஸ்வெட்டரை பரிசாக அளிப்பது சிறந்த கிஃப்டாக இருக்கும்.

3. கை கடிகாரங்கள் :

கடைசி நிமிட ஷாப்பிங் செய்ய தான் நேரம் இருக்கிறது என்றால் மற்றுமொரு பாதுகாப்பான பரிசுப்பொருட்கள் பட்டியலில் கை கடிகாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு பெரியவர்களை போலவே கை கடிகாரங்கள் கலக்ஷன் வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதில் இன்னொரு நன்மையையும் அடங்கியுள்ளது; நீங்கள் வாங்கும் கை கடிகாரம் எப்படியிருந்தாலும் சரி, அவர்களின் ஏதாவது ஒரு உடையோடு அது கண்டிப்பாக ஒத்துப்போகும்

Christmas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment