Advertisment

Christmas Wishes 2018: கிறிஸ்துமஸ் வாழ்த்து கொண்டாட்டம்

Christmas Wishes, Quotes, Sayings in Tamil: கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி கொண்டாடுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Christmas Wishes 2018:

Christmas Wishes 2018:

Christmas 2018 Wishes and Quotes in Tamil: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் இன்று களைக்கட்டியுள்ளது. அதிகாலை முதலே சர்ச்சுகளை நோக்கி படையெடுத்து வரும் மக்கள், அங்கு சிறப்பு ஆராதனைகளில் கலந்து கொண்டு வருகின்றனர். சென்னை சாந்தோம் சர்ச்சில் எண்ணற்ற கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறப்பு விழா, கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். அதேசமயம், கிழக்கு மரபு வழி திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜனவரி 7ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

மேலும், கிறிஸ்துமஸ் என்பது ஒரு மரபு வழிக் கொண்டாட்டம் என்றும், அது இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் இல்லை என்றும் ஒரு செவி வழிச் செய்தி உலாவுகிறது.

டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவு கிறிஸ்தவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் உள்ள பேராலங்களில் சென்று சிறப்பு வழிபாடு நடத்துவர். நள்ளிரவு திருப்பலியில் நற்கருணை விருந்தும் நடத்தப்படும்.

கிறிஸ்துமஸ் பரிசுகள்: உங்கள் குழந்தைகளை சர்ப்ரைஸ் செய்ய இதை வாங்கி கொடுங்கள்!

இதையொட்டி, கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் பேராலயங்களிலும் கிறிஸ்து அவதரித்ததன் அடையாளமாக, நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி, குழந்தை இயேசு மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பார்கள். விண்மீனுக்கு அடையாளமாக காகிதத்திலான விண்மீண்களை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.

இதயம் கவர்ந்தவர்களுக்கு இன்னும் வாழ்த்து அனுப்பவில்லையா? உங்களுக்காக இந்தச் செய்தி!

கிறிஸ்தவர்களின் வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்தாடை அணிவார்கள். நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து, உபசரிப்பார்கள். இரவில் வாண வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது உண்டு.

ஒருசிலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, குழந்தைகள் உள்பட பல தரப்பினருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துவதும் உண்டு. வாழ்த்துக்கள் என்றாலே இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தான் முதலில் நினைவுக்கு வரும். எந்த ஒரு பண்டிகையில் நாளிலும் உங்கள், நண்பர்கள்,உறவினர்களுடன் பகிர்ந்துக்கொள்ள நாங்கள் கலர்புல்லான வாழ்த்து மடல்களை இங்கே பகிர்வோம்.

இதோ உங்களுக்காக சிறப்பு கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகள்..

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

 

Christmas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment