Advertisment

ஒரு வாரம் ஆனாலும் கெட்டு போகாத சட்னி,.. இதுதான்!

சட்னியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chutney onion tomato chutney chutney recipes

chutney onion tomato chutney chutney recipes

`chutney onion tomato chutney chutney recipes : சட்னியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இங்கு அதில் மிகவும் எளிமையான ஒரு சட்னி ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இதற்கு தக்காளி மற்றும் வெங்காயம் இருந்தால் போதும். மேலும் இதனை பேச்சுலர்களுக்கு ஏற்ற ஒரு சட்னி ரெசிபி என்று கூட சொல்லலாம். சரி, இப்போது அந்த தக்காளி மற்றும் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Advertisment

வெங்காயம் - 2 தக்காளி - 4-5 பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் வெங்காயத்தை உரித்து, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை கழுவி, அதனையும் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், சுவையான தக்காளி மற்றும் வெங்காய சட்னி ரெடி!!!

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment