Advertisment

சிம்பிளான மல்லி சட்னி: பேச்சிலர்களும் சுலபமா செய்யலாம்

kothamalli chutney tamil video: பேச்சிலர்களும் எளிதாக செய்து இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என எந்த உணவுக்கும் பயன்படுத்தலாம்.

author-image
WebDesk
New Update
chutney recipes making chutney

chutney recipes making chutney

chutney recipe in tamil, kothamalli chutney tamil video: தேங்காய் சட்னியில் சலிப்பு ஏற்பட்டால், அருமையான மாற்று கொத்தமல்லி சட்னி. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை ஃப்ரெஷ்ஷாக கொத்தமல்லி இலை கிடைக்கிறது. விலையும் பெரும்பாலும் மலிவாக இருக்கிறது.

Advertisment

உடல் நலத்திற்கும் மல்லி சட்னி ஏற்றது. இப்படி மலிவாக கிடைக்கும் நல்ல உணவுப் பொருளான மல்லி இலையை பயன்படுத்தி டேஸ்டியாக சட்னி தயார் செய்வது எப்படி? எனப் பார்க்கலாம்.

kothamalli chutney tamil video: கொத்தமல்லி சட்னி

கொத்தமல்லி சட்னி தயாரிக்க தேவையான பொருட்கள்: கொத்தமல்லி – 1 கட்டு, வெங்காயம் – 2, தக்காளி – 1, மிளகாய் – 5, தேங்காய் – 1/2 கப் (துருவியது), உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – 2 பற்கள், இஞ்சி – 1 துண்டு, புளி – சுண்டைக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி சட்னி செய்முறை:

ஹோட்டல் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி செய்முறை வருமாறு: கொத்தமல்லி தழையில் இலைகளை ஆய்ந்து, நீரில் அலசிக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை சூடாக்கி, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு, வரமிளகாயினை போட்டு வதக்கவும்.இவை மூன்றும் சிவந்ததும், கொத்தமல்லி இலையினை போட்டு வதக்குங்கள்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, உப்பு, ஒரு துண்டு இஞ்சி, பூண்டு பற்கள், புளியினை போட்டு நன்கு வதக்கவும். பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் சுவையான கொத்தமல்லி சட்னி தயார். சிம்பிளான இந்த மல்லிச் சட்னியை பேச்சிலர்களும் எளிதாக செய்து இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என எந்த உணவுக்கும் பயன்படுத்தலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment