Advertisment

சின்ன வெங்காயம், பூண்டு… அவசர சட்னி; 2 நிமிடத்தில் ரெடி பண்ணுங்க!

chinna vengayam chutney recipes in tamil: சின்ன வெங்காயம், பூண்டு சட்னியை நம்முடைய பிரபல காலை உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றோடு சேர்த்து ருசித்தால் அருமையாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chutney recipes in tamil: chinna vengaya chutney making in tamil

chutney recipes in tamil: நம்முடைய வீடுகளில் பல வகை சட்னிகள் செய்து சுவைத்திருப்போம். ஆனால் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்த சட்னி சுவைத்திருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்காது. இந்த வகை சட்னிகள் செட்டிநாட்டு சமையல் வகையைச் சார்ந்தது. இந்த அற்புதமான சட்னியோடு வெள்ளை பணியாரம் சேர்த்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்டாக இருக்கும்.

Advertisment

மேலும், இவற்றை நம்முடைய பிரபல காலை உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றோடு சேர்த்து ருசிக்கலாம். இந்த டேஸ்டியான சின்ன வெங்காய சட்னி எப்படி தாயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

சின்ன வெங்காய பூண்டு சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:-

அரைக்க

சின்ன வெங்காயம் - 150 கிராம்

வரமிளகாய் – 10

பூண்டு பல்லு – 5

தண்ணீர் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - சிறிதளவு

கடுகு – 1/2 ஸ்பூன்

பெருங்காயம் தூள் – 2 சிட்டிகை

கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:-

முதலில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.

இவை நன்கு வதங்கியதும் அவற்றை முன்னர் அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்துக்கொள்ளவும்

இப்போது உங்களுக்கு பிடித்த காலை உணவுகளோடு சேர்த்து ருசிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment