Advertisment

வித்தியாச சுவையில் தேங்காய் சட்னியை இப்படிச் செய்துபாருங்கள்!

Coconut Coriander Chutney Recipe புதிய கொத்தமல்லி இலைகளிலிருந்து தனித்துவமான சுவையைப் பெறுவதால் பெரும்பாலான மக்கள் இதனை நிச்சயம் விரும்புவார்கள்.

author-image
WebDesk
New Update
Coconut Chutney Kothamalli Coriander Chatni Breakfast Recipe Tamil

Coconut Chutney Recipe Tamil

Coconut Kothamalli Chutney Recipe Tamil : சட்டென ரெடியாகும் தேங்காய் சட்டினிக்குக் கூடுதல் டேஸ்ட் கொடுக்கும் ஃபிரெஷ் கொத்தமல்லியைச் சேர்த்துப்பாருங்கள், நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்யத்தூண்டும். பயன்படுத்தப்படும் புதிய கொத்தமல்லி இலைகளிலிருந்து தனித்துவமான சுவையைப் பெறுவதால் பெரும்பாலான மக்கள் இதனை நிச்சயம் விரும்புவார்கள்.

Advertisment

தேவையான பொருள்கள்

துருவிய தேங்காய் - 1/2 கப்

ஃபிரெஷ் கொத்தமல்லி - 1/4 கப்

வறுத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - 1/4 இன்ச்

பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (காரத்திற்கேற்ப)

உப்பு, புளி - தேவையான அளவு

சீரகம் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

உடைத்த சிவப்பு மிளகாய் - 1

கறிவேப்பிலை - 1 சிறுகிளை

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

செய்முறை

மிதமான தீயில் கடலைப்பருப்பை நிறம் லேசாக மாறும் வரை வறுத்து, அதனோடு சீரகம் சேர்த்ததும், அடுப்பை அணைக்கவும்.

பருப்பு ஆறியபிறகு தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, புளி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

தாளிப்பு பொருள்களைக் கொண்டு தாளித்து, அரைத்த சட்னியோடு சேர்த்து சூடான இட்லி, தோசையோடு இந்த சுவையான கொத்தமல்லி தேங்காய் சட்னியைப் பரிமாறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment