Advertisment

ஐ.பி.எஸ் கனவு... 7 வயதில் சிறுத்தையாக சீறும் கோவை சிறுவன்: படங்கள்

சிறு வயது முதலே பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட வோல்டோ தனது 5 வயதில் தந்தை கேசவன் மற்றும் பயிற்சியாளர் ஆனந்த் உதவியுடன் முதல் முறையாக சிறுவர்களுக்கான பைக் ஓட்டும் பயிற்சி பெற்றார்.

author-image
WebDesk
New Update
Coimbatore 7 year old biker

Coimbatore 7 year old biker

செய்தி: ரகுமான், கோவை

Advertisment

தற்போதுள்ள காலச் சூழ்நிலையில் சிறுவர்கள், தங்களுக்கான விளையாட்டு சூழ்நிலைகளை தாங்களே அமைத்துக் கொள்கின்றனர். அதிலும் இப்போது மொபைல் விளையாட்டு மோகம், சிறுவர்கள் மத்தியில் அதிகமாவே உள்ளது.

குறிப்பாக பப் ஜி - பிரீ பையர் போன்ற கைபேசி விளையாட்டுகள் வீட்டிற்கு வெளியே செல்லாத அளவிற்கு குழந்தைகளின் கைகளையும், கண் பார்வைகளையும், அதிகமாக யோசிக்க கூடிய அந்த சிறு மூளையையும் அடிமையாக்கி விடுகின்றது.

பெற்றோர்களும் தங்களுடைய பிஸியான வாழ்க்கை ஓட்டத்தில் குழந்தைகளுடன் நேரத்தை கழிக்கும் வாய்ப்பை இழந்து, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் புரிதல் ஏற்படாதவாறு ஒரு சூழ்நிலை  தற்போது அதிக அளவில் உருவாகியுள்ளது.

ஆனால் இது எல்லாம் கவனத்தில் கொண்டு கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த கேசவன், தன்னுடைய மகனின் எதிர்கால உடல் ஆரோக்கியத்தையும் - மனரீதியான  வலுவினையும் கவனத்தில் கொண்டு தன்னுடைய மகன் சீறிப்பாய்வதற்கான ஒரு வழிதடத்தை உருவாக்கும் ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

publive-image
publive-image
publive-image

இவரது மகன் வோல்டோ. 7 வயதான இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயது முதலே பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட வோல்டோ தனது 5 வயதில் தந்தை கேசவன் மற்றும் பயிற்சியாளர் ஆனந்த் உதவியுடன் முதல் முறையாக சிறுவர்களுக்கான பைக் ஓட்டும் பயிற்சி பெற்றார்.

ஒரு சில நாட்களிலேயே பைக் ஓட்ட துவங்கிய வோல்டோ தற்போது சீறிப்பாயந்து பதக்கங்களை குவித்து வருகிறார்.

publive-image
publive-image
publive-image

வோல்டோ டெர்ட் பைக் எனப்படும் மண் மற்றும் மேடுகளில் பைக் ஓட்டும் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார்.

மாநில அளவிலான சிறுவர்களுக்கான பைக் பந்தயத்தில் பல்வேறு பதக்கங்களையும் கோப்பைகளையும் குவித்த வோல்டோ, எம்.ஆர்.எஃப்  நிறுவனம் நடத்திய சிறுவர்களுக்கான பைக் பந்தயத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்.

மண் மற்றும் மேடுகளில் அச்சமின்றி சீறிப்பாயும் வோல்டோ, தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்றும், சிறந்த பந்தய வீரராக வேண்டும் என்றும் இலக்குகளை நிர்ணயித்து கனவுடன் பயணிக்கிறேன் என்று கூறுவது சிறுவனின் தன்னம்பிக்கையும், தந்தையின் ஒத்துழைப்பும் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கான கல்விகளை தேர்ந்தெடுத்து  கல்விக்கான நேரத்திற்கும் ஒத்துழைப்பு கொடுத்தாலும் - அதிகப்படியாக  விளையாட்டு ரீதியான  ஊக்குவித்தல் இருந்தால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் - உடல் ரீதியாகவும் - மன ரீதியாகவும் நோயில்லா ஒரு பாதையை அமைத்து தரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment