பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய் நாணயத்திற்கு சுடசுட சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயம் பல இடங்களில் புழக்கத்தில் இருந்தாலும் பத்து ரூபா நாணயத்தை மளிகை கடை, காய்கறி கடை அரசு மற்றும் தனியார் பஸ்களில் வாங்குவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நீதிமன்றம் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதை புறக்கணிக்க கூடாது என அறிவுரை வழங்கி உள்ளது. ஆனாலும் சில இடங்களில் 10-ரூபாய் நாணயங்களை வாங்குவதில் பொதுமக்களும் வியாபாரிகளும் தயக்கம் காட்டி வருகின்றனர்.



இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு மின்சார வாரிய அலுவலகம் எதிரே புதிதாக யாழ் பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது அந்த கடை திறப்பு விழாவை முன்னிட்டு 10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த 10 ரூபாய் நாணயங்களை முதலில் கொண்டு வரும் 125 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து கடை முன்பு ஏராளமான பிரியாணி பிரியர்கள் திரண்டனர் அங்கு வந்து வரிசையில் 10- ரூபாய் நாணயங்களுடன் நின்ற 125 பேருக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது..
10 ரூபாய் நாணயத்தை அனைவரும் வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்திய பிரியாணி கடைக்காரரை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி சென்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“