scorecardresearch

இது புதுசு! நன்னீர் முத்துச்சிப்பி வளர்ப்பில் அசத்தும் கோவை பொறியியல் பட்டதாரி

தமிழகத்தில் இதனை மருந்தாக எடுத்துக் கொள்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை, இதற்காக தமிழக அரசிடம் பேசி வருகிறேன்- விதுபாலு

Freshwater Pearl Farming
Freshwater Pearl Farming

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விதுபாலு. பொறியில் பட்டதாரியான இவர் தற்போது நன்னீர் முத்துசிப்பி வளர்ப்பில் சிறந்து விளங்கி வருகிறார். மேலும் நன்னீர் முத்துசிப்பி வளர்ப்பை அனைவரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இவரிடம் பலரும் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்னீர் முத்து சிப்பியில் பல்வேறு மருத்துவ குணாதிசயங்கள் இருப்பதால் மருத்துவர்களும் இவரிடம் வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர்.

விதுபாலு

நன்னீர் முத்து வளர்ப்பு குறித்து விதுபாலு நம்மிடம் கூறியதாவது; கடந்த 9 வருடங்களாக ஐ.டி.யில் பணியாற்றி விட்டு இந்த நன்னீர் முத்து வளர்ப்பை செய்ய தொடங்கினேன். வீட்டிலேயே R&D தொடங்கி, அது வேலை செய்கிறதா இல்லையா என சோதனை செய்து பிறகு பெரிய இடத்தில் இதை ஆரம்பித்தேன். தற்போது ஆர்கானிக் விவசாயத்தையும் தொடங்க உள்ளேன். 

R&D ல் சிப்பி சோதனைகள் மேற்கொண்டு பிறகே அடுத்தகட்டத்தை துவங்க உள்ளோம். இதனை வீட்டில் இருந்தும் செய்யலாம்.

சிப்பியின் குணாதிசயங்கள் தெரிந்த பிறகு பல்வேறு மருத்துவர்கள் நம்மிடம் வந்து பயிற்சி எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பலரும் இந்த சிப்பி வளர்ப்பில் ஈடுபாடுடன் உள்ளனர். குறிப்பாக அவர்களது உடல் நலத்தை பேணுவதற்காக சிப்பி வளர்ப்பில் ஆர்வம் காட்டி அதனை உண்டு வருகின்றனர்.

மருத்துவர்கள் மட்டுமின்றி தொழில் துவங்க இருப்பவர்களும், இல்லத்தரசிகள் வருமானம் இல்லாதவர்களும் இங்கு பயிற்சி எடுத்துச் சென்றுள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வந்து பயிற்சி மேற்கொண்டு செல்கின்றனர். கேரளாவில் மருந்து துறைகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன்.

தமிழகத்தில் இதனை மருந்தாக எடுத்துக் கொள்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை, இதற்காக தமிழக அரசிடம் பேசி வருகிறேன்.

நன்னீர் முத்து வளர்ப்பில், ஆண்டிற்கு ஒருமுறைதான் வருமானம் ஈட்ட முடியும். சுமார் 100 சிற்பிகளை நல்ல முறையில் வளர்த்தால் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட இயலும். மேலும் நமக்கு என்ன வடிவம் தேவையோ அதை இதில் கொண்டு வர முடியும்.

மேலும் தாங்கள் உருவாக்கியுள்ள இந்த வடிவங்களைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியுமா என நகை வடிவமைப்பாளர்களைக் கொண்டு சோதனை செய்து வருகிறோம்.

தான் வளர்த்து வரும் இந்த முறையில் தாமாகவே re production நடைபெற்றது. இது தனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. நன்னீர் முத்துவின் மிக முக்கிய மருத்துவ குணங்கள் என்பது சதைக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதனை தொடர்ந்து நண்பர்களுக்கும் பரிசீலனை செய்து வருகிறேன். மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாலியல் உடல் பிரச்சனைகள் குறைய உதவிகரமாக இருக்கும். இதனை பவுடராக்கி சூரனமாக உட்கொண்டு வந்தால் உடலை குளுமையுடன் வைத்து கொள்ளும். மேலும் இதன் அடுக்குகள் கால்சியமாகவும் பயன்படுகிறது என்றார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore engineering graduate who excels in freshwater pearl farming

Best of Express