Advertisment

அத்தப்பூக்கோலம், செண்டை மேளம், களைகட்டிய சித்தாப்புதூர் ஐயப்பன் கோயில் - கோவையில் ஓணம் பண்டிகை கோலாகலம்

மலையாளம் பேசும் மக்கள் அதிகம் வழிபடும் சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் பலர் குடும்பங்களுடன் வந்து தரிசனம் செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore

Coimbatore Onam festival celebration

தங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரள மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.

Advertisment

தமிழக மக்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை போல கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை.கேரள மக்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

கோவை மாவட்டம் கேரள மாநிலத்தை ஒட்டி இருக்கிறது. இங்கு ஏராளமான மலையாளம் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த வாரம் ஓணம் பண்டிகை சீசன் தொடங்கியதில் இருந்தே பள்ளி கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள் என பல இடங்களில் பாரம்பரிய முறைப்படி ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வந்தனர்.

முக்கிய நாளான திருவோண தினமான இன்று மக்கள் அதிகாலையிலேயே, மக்கள் நீராடி புத்தாடை உடுத்தி பண்டிகையை கொண்டாடினர்.

Coimbatore onam festival celebration
Coimbatore onam festival celebration
publive-image
Coimbatore onam festival celebration
Coimbatore onam festival celebration
Coimbatore onam festival celebration
Coimbatore onam festival celebration
Coimbatore onam festival celebration

மலையாளம் பேசும் மக்கள் அதிகம் வழிபடும் சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் பலர் குடும்பங்களுடன் வந்து தரிசனம் செய்தனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அத்தப்பூக்கோலம், செண்டை மேளம், சிறப்பு அலங்காரங்கள் என விழா கோலம் பூண்டுள்ளது. ஓணம் பண்டிகைக்காக கோவையில் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளுர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment