Advertisment

காலின்ஸ் அகராதி வெளியிட்ட 2021 ஆம் ஆண்டின் வார்த்தை- Crypto, Double vaxxed, NFT வார்த்தைகள் இடம்பிடிப்பு!

இரண்டு டோஸ்களையும் போட்டவர்களை கவுரவிக்கும் விதமாக டபுள்-வாக்ஸ்ட் வார்த்தை, 2021 ஆம் ஆண்டிற்கான காலின்ஸின் வார்த்தை பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
காலின்ஸ் அகராதி வெளியிட்ட 2021 ஆம் ஆண்டின் வார்த்தை- Crypto, Double vaxxed, NFT வார்த்தைகள் இடம்பிடிப்பு!

காலின்ஸ் அகராதி '2021-ஆம் ஆண்டின் வார்த்தையை' அறிவித்துள்ளது. அதில் NFT (Non Fungible Token) வார்த்தை முதலிடம் பிடித்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.

Advertisment

NFT - Non Fungible Token என்ற வார்த்தையின் சுருக்கம். கலை, இசை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற நிஜ உலகப் பொருட்களைக் குறிக்கும் டிஜிட்டல் சொத்து. அவை ஆன்லைனில் கிரிப்டோகரன்சி மூலம் வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன. பொதுவாக கிரிப்டோக்களைப் போலவே அதே அடிப்படை மென்பொருளைக் கொண்டு குறியாக்கம் (Encoded) செய்யப்படுகின்றன. இது 2021-ஆம் ஆண்டின் காலின்ஸ் வார்த்தை என்று பெயரிடப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமாக, அகராதி குழுவின்படி, "NFT பயன்பாட்டில் 11,000 சதவீதம் உயர்வு" என்ற வார்த்தைகளின் பட்டியலில் NFT முதலிடத்தில் உள்ளது.

இந்த ஷார்ட்லிஸ்ட்டில் இடம்பிடித்த மற்றொரு வார்த்தை டபுள் வேக்ஸ்டு (double-vaxxed). இதை காலின்ஸின் வலைப்பதிவில் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான டேவிட் ஷரியத்மதாரி (David Shariatmadari) வெளிப்படுத்தினார்.

டபுள்-வாக்ஸ்ட் (தமிழில் இரட்டை தடுப்பூசி) என்ற வார்த்தை, தடுப்பூசிகளின் ஆண்டாக இருந்த உண்மையைப் பிரதிபலிக்கிறது. இரண்டு டோஸ்களையும் போட்டவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த வார்த்தை, 2021 ஆம் ஆண்டிற்கான காலின்ஸின் வார்த்தை பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்றொன்று கலப்பின வேலை(Hybrid Working), வீடு, பணி என பல்வேறுச் சுழல்களுக்கிடையே மாறிமாறி வேலை செய்வதை குறிக்கும்.

இதற்கிடையில், COP-26 மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக செயல்பட வேண்டியதன் பின்னணியில், காலநிலை கவலை (climate anxiety) என்ற சொற்றொடரும் பட்டியலில் இடம் பிடித்தது. குறிப்பாக இந்த ஆண்டு COP26 வெளிச்சத்தில், காலநிலை நெருக்கடி ஒரு கவலையாக உள்ளது. எனவே காலநிலை கவலை, பட்டியலில் இடம் பெறுவதில் ஆச்சரியமில்லை என்று ஆசிரியர் வெளிப்படுத்தினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற சொற்களின் பட்டியல் இதோ

காலநிலை கவலை Climate anxiety: காலநிலை மாற்றம் குறித்த கவலையால் ஏற்படும் துயர நிலை.

இரட்டை தடுப்பூசி Double-vaxxed: ஒரு நோய்க்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளை போடுவது

மெட்டாவர்ஸ் Metaverse: முப்பரிமாண மெய்நிகர் சூழல்களை உள்ளடக்கிய இணையத்தின் முன்மொழியப்பட்ட பதிப்பு.

பிங்டெமிக் Pingdemic: தொடர்பு-தடமறிதல் செயலி (contact-tracing app) .மூலம், பொது உறுப்பினர்களின் பெரிய அளவிலான அறிவிப்பு.

செயுகி Cheugy: இது மிகவும் புதிதோ அல்லது நாகரீகமானதோ இல்லை,  பெரும்பாலும் 2000-களில் இருந்து யாரோ அல்லது ஏதோவொன்றைக் குறிக்கும்.

கிரிப்டோ Crypto: கிரிப்டோகரன்சியின் சுருக்கம்: ஆன்லைனில் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் நாணயம்.

கலப்பு Hybrid: வீடு மற்றும் அலுவலகம் போன்ற பல்வேறு பணிச்சூழல்களுக்கு இடையே மாறி மாறிச் செயல்படும் நடைமுறை.

நியோப்ரோனொன் Neopronoun: சமீபத்தில் உருவாக்கப்பட்ட பிரதிபெயர், குறிப்பாக பாலின வேறுபாடுகளைத் தவிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. வழக்கமான பிரதிபெயர்களான "அவர்” (he) மற்றும் "அவள்"(She)ஆகியவற்றுடன் மாறுபட்டு, நியோப்ரோனொன்களில் "xe", "ze" மற்றும் "ve" ஆகியவை அடங்கும் என்று காலின்ஸ் வலைப்பதிவில் ஷரியாத்மதாரி குறிப்பிட்டுள்ளார்.

ரீஜென்சிகோர் Regencycore: ரீஜென்சி காலத்தில் (1811-20) உயர் சமுதாயத்தில் அணிந்திருந்த ஆடைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு உடை.

கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு அகராதியில் ‘லாக்டவுன் (lockdown) வார்த்தை சேர்க்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள மக்களின் அனுபவத்திற்கு ஒத்ததாக இருந்ததால் இந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்ததாக அகராதி ஆசிரியர்கள் கூறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment