Advertisment

'நாங்கெல்லாம் வாயிலேயே சீமாறு வெச்சு சுத்துவோம்' - மணிமேகலையின் சென்னை ஸ்லாங் அட்ராசிட்டிஸ்!

Cook with Comali Manimegalai Hussain Youtube Viral Videos இந்த வாய்வழி வாக்குவாதம், ஒரு கட்டத்தில் நகைச்சுவையான பனிப்போராக மாறியது.

author-image
WebDesk
New Update
Cook with Comali Manimegalai Hussain Youtube Viral Videos Tamil News

Cook with Comali Manimegalai Hussain Youtube Viral Videos Tamil News

Cook with Comali Manimegalai Hussain Youtube Viral Videos Tamil News : சென்ற வருட லாக்டவுனில் சாமானிய மக்கள் முதல் செலிபிரிட்டி வரை பெரும்பாலானவர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதில் ஏராளமான கன்டென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை, தன்னுடைய பெயரிலேயே ஓர் யூடியூப் சேனலை ஆரம்பித்து, அதில் மக்களை என்டெர்டெயின் செய்யும் வகையில் ஏராளமான காணொளிகளை பதிவிட்டு வருகிறார்.

Advertisment
publive-image

1 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களை கொண்டிருக்கும் மணிமேகலையின் சேனலில் அப்லாட் செய்யப்படும் பெரும்பாலான வீடியோக்கள், நிச்சயம் ட்ரெண்டிங் இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் அவர் பதிவேற்றிய வீடியோ உண்மையில் சிரிக்க வைத்து ரசிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதில், தன் கிராமத்திற்குச் சென்றிருக்கும் மணிமேகலை மற்றும் அவருடைய கணவர் ஹுசைன் இருவரும் அங்கிருக்கும் தங்களின் உறவினர்களுக்குச் சென்னை ஸ்லாங் கற்றுத்தருகிறோம் என்ற பெயரில் அவர்கள் செய்திருக்கும் அட்ராசிட்டிகள் பதிவாகியுள்ளன.

publive-image

இதில் சென்னை ஸ்லாங் கற்றுக்கொடுக்கும் மணிமேகலைக்கே 1008 சந்தேகங்கள். இந்த நிலையில் அங்குள்ளவர்களுக்குக் கற்றுக்கொடுத்து மொழியைக் கொன்றுவிட்டனர். 'எப்பிடிக்கிற?', 'ஜோபுடா', புட்டாபோட்டுட்டே இருக்காதா' உள்ளிட்ட சில சென்னை மொழிகளைக் கற்றுக்கொடுத்தார் ஹுசைன். அதேபோல அவர்களுடைய உறவினர்கள் கோயம்புத்தூர் ஸ்லாங்கை இவர்கள் இருவருக்கும் கற்றுக்கொடுத்தார். இந்த வாய்வழி வாக்குவாதம், ஒரு கட்டத்தில் நகைச்சுவையான பனிப்போராக மாறியது.

கிராமத்தில் எப்படி சண்டையிடுவார்கள்? சென்னையில் எப்படி சண்டைபோட்டுக்கொள்வார்கள் என இந்த போர் நீண்டது. ஆனால், ஒவ்வொரு நொடியிலும் மணிமேகலையின் உடல்மொழி சிரிப்பை வரவழைத்தது. 'நாங்கெல்லாம் சீமாறு வெச்சு வெளுத்து வாங்குவோம்' என்று தன் உறவுக்கார கூறியபோது, 'நாங்கெல்லாம் வாயிலேயே சீமாறு வெச்சிருக்கோம்' என்று மணிமேகலை கொடுத்த கவுன்ட்டர் குபீர் சிரிப்பை வரவைத்தது.

ஏராளமான பல்பு மொமென்ட்டுகளை பெற்ற மணிமேகலை, இறுதியில் கோயம்புத்தூர் ஸ்லாங்கில் ஒவ்வொரு வார்த்தையின் முடிவில் 'ங்' சேர்த்து, அனைவருக்கு நன்றி தெரிவித்த விதம் லவ்லி. தற்போது வரை இந்த காணொளி 3 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுச் சென்றுகொண்டிருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Youtube Vj Manimegalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment