Advertisment

சிதைந்த முகம், நண்பர்கள் உதவி, மில்லியன் ரசிகர்கள் - மனம் திறக்கும் பவித்ரா லட்சுமி!

Cook with Comali Pavithra Lakshmi Accident Face Surgery அழகு என்றாலே, வெளிர் நிறம், வடு இல்லாத சருமம் என்றுதான் நம் சமூகம் கட்டமைத்துள்ளது. ஆனால், அது உண்மை அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cook with Comali Pavithra Lakshmi Accident Face Surgery Tamil News

Cook with Comali Pavithra Lakshmi Accident Face Surgery Tamil News

Cook with Comali Pavithra Lakshmi Accident Face Surgery Tamil News : தற்போதைய தமிழ்நாட்டு சென்சேஷனல் மாடல், கதாநாயகி யார் என்று கேட்டால், நிச்சயம் பவித்ரா லட்சுமியின் பெயர் இல்லாமல் இருக்காது. தோன்றியது சின்னத்திரை என்றாலும், வெள்ளித்திரை கதாநாயகிகளைவிட ரசிகர்கள் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். எந்த அளவிற்கு பவித்ராவுக்கு மக்களிடத்திலிருந்து ஆதரவு கிடைக்கிறதோ, அதே அளவிற்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Advertisment
publive-image

பவித்ரா லட்சுமி சர்ஜரி செய்துதான் முகத்தை மாற்றியிருக்கிறார். உண்மையில் அவருடைய முகம் உண்மையானதல்ல என்று ஏராளமான விமர்சனங்களை அவரைச் சுற்றி எழுந்துகொண்டிருக்கின்றன. இது பற்றி அவரே ஓர் தனியார் யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.

publive-image

"என் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க முடியாத நாள் அது. மிகப்பெரிய விபத்தில் சிக்கி, என் முகம் முற்றிலும் சிதைந்துவிட்டது. அப்போதுதான் திரைத்துறையில் எதையாவது சாதித்துவிடவேண்டும் என்கிற ஆசையில் இருந்தேன். ஆனால், இந்த விபத்து என் வாழ்க்கையையே மாற்றிவிடுமோ என்கிற அச்சத்திற்கு என்னை கொண்டுசென்றுவிட்டது.

publive-image

திரைக் கலைஞர்களுக்கு முகம்தான் மூலதனம். ஆனால், அதுவே சிதைந்து இருந்தால் எப்படி இருக்கும்! வாழ்க்கை முடிந்துவிட்டது என்றுதான் நினைத்திருந்தேன். நானே அட்மிட் ஆகி, எல்லாவற்றையும் நானேதான் செய்துகொண்டேன். ஆனால், அந்த நேரத்தில் என் நிழல் போல என்னுடனே பயணம் செய்தவர்கள் என் நண்பர்கள்தான். அவர்களை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்.

publive-image

இந்த விபத்து பற்றி என் அம்மாவுக்கு முதலில் நான் சொல்லவே இல்லை. காரணம், நான் திரைத்துறைக்கு வந்தது அம்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என்னுடைய சொந்த முயற்சியில்தான் இங்கு வந்தேன். இந்நிலையில், அவரிடம் இந்த விபத்து பற்றிச் சொல்ல எண்ணமில்லை. மேலும், இந்த விஷயம் தெரிந்தால் அவர் மிகவும் பயந்துவிடுவார். அதனால் ஆரம்பத்தில் எதுவும் சொல்லவில்லை. சிறிது காலம் பிறகுதான் சொன்னேன்.

publive-image

சிறு வயது முதலே நான் பெண்கள் பள்ளியில்தான் படித்தேன். அங்கு, முகத்தில் சின்ன பரு வந்தாலே, 'இவள் அழகு இல்லை' என்கிற மனப்பான்மையை விதைக்கும் இடம். அழகு என்றாலே, வெளிர் நிறம், வடு இல்லாத சருமம் என்றுதான் நம் சமூகம் கட்டமைத்துள்ளது. ஆனால், அது உண்மை அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

publive-image

என்னைப் புகழ்ந்து போடப்படும் மீம்ஸ் போலவேதான் என்னை இகழ்ந்துகூறும் மீம்ஸ்களையும் எடுத்துக்கொள்வேன். விமர்சனங்கள் இருந்தால்தானே நம் தவறுகளை ஆராய்ந்து அவற்றைத் திருத்திக்கொள்ள முடியும். என்னதான் இருந்தாலும் மக்கள் கலைஞர்கள் நாங்கள்!"

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pavithra Lakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment