Advertisment

பாட்டு முதல் டூர் வரை - மாஸ் காட்டும் 'குக் வித் கோமாளி' ஷிவாங்கி யூடியூப் சேனல்

Cook with Comali Shivangi Youtube Channel இவர் பதிவேற்றிய அத்தனை வீடியோக்களும் 1, 2 என மில்லியன் கணக்கான வியூஸ்களை குவித்துள்ளன.

author-image
WebDesk
New Update
Cook with Comali Shivangi Youtube Channel Review Tamil News

Cook with Comali Shivangi Youtube Channel Review Tamil News

Cook with Comali Shivangi Youtube Channel Review Tamil News : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி தீவிரமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியிருப்பவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கராக சின்னதிரையில் காலடி எடுத்து வைத்தாலும், தற்போது நகைச்சுவை கலைஞராகவே மாறிவிட்டார். இந்நிலையில் தனிப்பட்ட வகையில் தனக்கென யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதிலும் ஏராளமான நகைச்சுவை கன்டென்ட்டுகளை கொடுத்து வருகிறார்.

Advertisment
publive-image

ஆரம்பத்தில் பாடல்களைப் பாடி காணொளிகளை அப்லோட் செய்தவர், பிறகு Vlog கன்டென்ட்டுகளை அடுக்கினார். அதிலும் தன் அம்மாவோடு இணைந்து, இருவருடைய விதவிதமான காதணி கலெக்ஷனை வைத்து மட்டுமே இரண்டு காணொளிகள். அதில், ஒன்று 2 மில்லியன் வியூஸ்களை பெறவுள்ளது.

publive-image

அதுமட்டுமல்ல, இவர்கள் அந்த காதணிகளையெல்லாம் எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பதையும் அந்த வீடியோவில் பதிவு செய்திருந்தனர். கடனைத் தொடர்ந்து ஏராளமான யுடியூபர்ஸ்களின் பக்கங்களில் அந்த குறிப்பிட்ட கடையின் Vlog வீடியோக்களை காணமுடிந்தன.

&t=32s

இதனைத் தொடர்ந்து, ஃபிரிட்ஜ் டூர், நேரலை, ஷூட்டிங் ஸ்பாட் விசிட், கேரளா டூர் Vlog, பொங்கல் கொண்டாட்டம் என இவர் பதிவேற்றிய அத்தனை வீடியோக்களும் 1, 2 என மில்லியன் கணக்கான வியூஸ்களை குவித்துள்ளன. அதிலும், குக் வித் கோமாளி ஷூட்டிங் ஸ்பாட்டில், புகழ், மணிமேகலையோடு இணைந்து ஷிவாங்கி செய்திருக்கும் ஃபன் மொமென்ட்டுகள் ரசிக வைக்கும்படியாக இருந்தன.

publive-image

ஏற்கெனவே ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கும் ஷிவாங்கி, சேனல் ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்திலேயே மில்லியன் சப்ஸ்க்ரைப்பர்ஸ்களை பெற்றிருக்கிறார். இது விரைவில் 2 மில்லியனை எட்டப்போகிறது. எவ்வளவுதான் நகைச்சுவை கன்டென்ட்டுகள் இருந்தாலும், இவருடைய பாடல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Youtube Cook With Comali Shivangi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment