Advertisment

மிளகாய் விதையில் ஆர்கானிக் உரம், பிரபல செஃப் சொல்வது என்ன?

இப்போது உங்கள் சமையல் விளையாட்டை ஒரு புதிய பரிணாமத்துக்கு கொண்டு செல்லுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cooking hacks

Cooking hacks

சமையலைப் பொறுத்தவரை, நீங்கள் சமையலறையில் எத்தனை ஆண்டுகள் கழித்திருந்தாலும், சில உணவுகளின் சுவையை முழுமையாக்குவதற்கும், பொருட்களை துல்லியமாக அளவிடுவதற்கும் இன்னும் போராடுவது பொதுவானது தான்.

Advertisment

அதிர்ஷ்டவசமாக சில ஹேக்ஸ் உள்ளன, அவை நிச்சயமாக, இந்த வேலையை எளிதாக்கும்.

செஃப் சஞ்சீவ் கபூரின் இன்ஸ்டாகிராம் கணக்கு, சுவையான ரெசிபிகள், எளிமையான அதே சமயம் பயனுள்ள சமையல் குறிப்புகள் நிறைந்தது. இப்போது உங்கள் சமையல் விளையாட்டை ஒரு புதிய பரிணாமத்துக்கு கொண்டு செல்லுங்கள்.

சிறிய உரல் எப்படி பயன்படுத்துவது?

அனைவரது வீட்டு கிச்சனிலும் இந்த சிறிய உரல் இருக்கும். ஆனால் இதை பொருட்களை இடிக்கவும், நசுக்கவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர், இதனால் சில மசாலா உரலில் இருந்து கீழே சிதறும்.  இது பலர் செய்யும் ஒரு பொதுவான தவறு.

இனி அப்படி செய்யாமல், வீடியோவில் உள்ளபடி உரலில் பொருட்களை வைத்து அதை லேசாக இடித்து, பிறகு கிரைண்டரில் அரைப்பது போல சூழற்றவும்.

பலர் புதிய உரலை சீசனிங் செய்யாமல் பயன்படுத்தத் தொடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீசனிங் செய்ய உரலில், பச்சை அரிசி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக நசுக்கவும். இதை ஓரமாக வைத்துவிட்டு, உரலை சிறிது தண்ணீரில் கழுவவும். தேவைப்படும் போது உரலை பயன்படுத்தவும், என்று அவர் பரிந்துரைத்தார்.

இந்த ஹேக்குகளுடன் ஒத்துப்போகும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிபுணரும் சுகாதாரப் பயிற்சியாளருமான கரிஷ்மா ஷா கூறுகையில், மிளகு, மசாலா, மூலிகைகள், அரிசி, நட்ஸ் மற்றும் பிற விதைகள் போன்ற பல்வேறு பொருட்களை அரைக்க அல்லது நசுக்க நீங்கள் ஒரு சிறிய ஆட்டுக்கல் பயன்படுத்தலாம் என்றார்.

மேலும், உரல் சுத்தம் செய்ய இரண்டு வழிகளையும் அவர் பரிந்துரைத்தார். புதிய வாசனையை நீங்கள் விரும்பினால், அதை சூடான நீரில் கழுவலாம். இல்லையெனில், பொருட்களின் சுவை மற்றும் நறுமணத்தைப் பாதுகாக்க நீங்கள் அதை சாதாரணமாக கழுவி, மீண்டும் அதே மசாலா அரைக்க பயன்படுத்தலாம்.

ப்யூரி உறைய வைப்பது எப்படி?

பிரீசரில் ப்யூரி சேமிக்கும் போது, ​​அதை முக்கால் பங்கு மட்டுமே நிரப்பவும். திரவம் உறைந்தவுடன், அது விரிவடையும். அதை முக்கால் பாகம் நிரப்பினால் அது நன்றாக உறைந்திருப்பதையும் வெளியே வராமல் இருப்பதையும் உறுதி செய்கிறது, என்று செஃப் அறிவுறுத்தினார்.

இதை ஒப்புக்கொண்ட ஷா, ப்யூரிஸை ஃப்ரீசரில் அதிக காலம் சேமித்து வைக்கக்கூடாது, அதற்கு பதிலாக அதை புதியதாக தயாரிக்க வேண்டும். இது ஒரு மாதம் வரை சேமிக்கலாம், அதையும் தாண்டி அது அழுகிவிடும், என்று அவர் கூறினார்.

நிபுணர் ஃபிரிட்ஜில் ப்யூரி சேமிப்பதற்கான பிற முறைகளையும் பகிர்ந்து கொண்டார். மக்கள் ஐஸ் ட்ரேயில், பியூரி ஊற்றி, பிரீசர் உள்ளே சேமிக்கலாம். மறுபுறம், நீங்கள் அதை ஜிப்லாக் பையில் வைத்து ஃபிரிட்ஜில் வைக்கலாம்.

மீதமுள்ள மிளகாய் விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது?

செஃப் சஞ்சீவ் கபூர், மிச்ச மிளகாய் விதைகளைப் பயன்படுத்தி சொந்தமாக மிளகாய்ச் செடியை வளர்க்கலாம் என்று பகிர்ந்து கொண்டார். அவற்றை மண்ணில் விதைத்து வளர விடுங்கள். தொடர்ந்து தண்ணீர் ஊற்றவும். இன்னும் சில மாதங்களில் மிளகாய் செடி காய்க்கும்.

இதேபோல், மீதமுள்ள மிளகாய் விதைகளையும் அரைத்து நசுக்கி மிளகாய்த் தூள் தயாரிக்கலாம், இது மற்ற உணவுகளில் சுவையூட்டப் பயன்படுத்தப்படலாம் என்று ஷா கூறினார்.

செஃப் கரிமி மேலும் மிளகாய் விதைகளை உரமாக்குவதற்கு பயன்படுத்த பரிந்துரைத்தார். மிளகாய் விதைகள் ஆர்கானிக், அதை உரக்குவியல் அல்லது தொட்டியில் சேர்க்கப்படலாம். உரமாக்கல் என்பது இயற்கையான செயல்முறையாகும், இது கரிம கழிவுகளை ஊட்டச்சத்து நிறைந்த மண்ணாக மாற்றுகிறது.

விதைகள் காலப்போக்கில் உடைந்து, உரத்தின் வளத்திற்கு பங்களிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment