“என்னைப்போல் டயட் பின்பற்றாதீர்கள்..” ‘குக் வித் கோமாளி’ சுனிதாவின் பியூட்டி ட்ரிக்ஸ்!

Cooku with Comali Sunitha Beauty Tips தயவுசெய்து என்னைப்போல் மோசமான டயட் எல்லாம் யாரும் பின்பற்றவேண்டாம்.

Cooku with Comali Sunitha Beauty Tips Hairfall Solution Tamil News
Cooku with Comali Sunitha Beauty Tips Hairfall Solution Tamil News

Cooku with Comali Sunitha Beauty Tips Tamil News : வட இந்தியாவிலிருந்து வந்து நடனப் புயலாக உருமாறி தமிழ்நாட்டு மக்களின் இதயங்களைக் கொள்ளையடித்த சுனிதா, தற்போது ‘குக்கு வித் கோமாளியின்’ ஃபேவரைட் கோமாளியாக வலம்வந்துகொண்டிருக்கிறார். நடனத்திற்கு மட்டுமில்லாமல் இவருடைய நகைச்சுவை உணர்வுக்கும் தற்போது ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர் சமீபத்தில் பகிர்ந்துகொண்ட சரும பாதுகாப்பு வழிமுறைகள் இங்கே!

Cooku with Comali Sunitha

“டயட் இருந்தா ஓவரா டயட்டுல இருப்பேன். இல்லைனா கண்டபடி சாப்பிடுவேன். இது தவறான செயல்முறை. தயவுசெய்து என்னைப்போல் மோசமான டயட் எல்லாம் யாரும் பின்பற்றவேண்டாம். நிச்சயமாக கலோரி எண்ணிக்கொண்டே இருந்தால் உங்கள் மனநலம் போய்விடும். சரியான நேரத்தில் மூன்று வேலை தவறாமல் சாப்பிட்டு, நன்றாகத் தூங்கினால் உடல்நலம் நன்றாக இருக்கும்.

Sunita with Singer Hariharan

முடிந்தவரை இரவு 8 மணிக்குள் இரவு உணவை முடித்திருப்பது சிறந்தது. கூடவே, உடற்பயிற்சியையும் செய்யவேண்டும். இப்படிச் செய்தாலே போதும், ஆரோக்கியமான உடல்நிலை நூறு சதவிகிதம் உறுதி” என்கிற டயட் டிப்ஸ் கொடுத்தவர் மேலும், சரும பராமரிப்பு பாயின்ட்டுகளையும் அடுக்குகிறார்.

Cooku with Comali Sunita Viral Pics

“வெளியில் செல்லும்போது மேக்-அப் போட்டிருந்தாலும் இல்லை என்றாலும், இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தை நன்கு கழுவுவது அவசியம். அதனைத் தொடர்ந்து நான் நைட் க்ரீம், டோனர் மற்றும் ஐ க்ரீம் உபயோகிப்பேன். தலைமுடிக்கு வாரம் ஒருமுறை மிதமான சூடான எண்ணெய்க்கொண்டு மசாஜ் செய்து குளிப்பேன். இது நிச்சயம் அனைவர்க்கும் க்ளிக் ஆகும்” என்கிற குறிப்போடு நிறைவு செய்தார் சுனிதா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cooku with comali sunitha beauty tips hairfall solution tamil news

Next Story
வீடே மணக்கும் சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு!Mor Kuzhambu recipe Tasty Ladysfinger Mor Kozhambu recipe Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com