Advertisment

கோவிட்-19 பெருந்தொற்றின் போது எப்படி ரத்ததானம் கொடுப்பது?

Blood donation during pandemic : கோவிட்-19 நோய் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் , அண்மைகாலமாக எந்த ஒரு உடல் நலக்குறைபாடும் இல்லாதவர்கள் அல்லது கோவிட்19 நோய்தொற்றுக்கு உள்ளானவர்களோடு தொடர்பில் இல்லாதவர்கள் ரத்த தானம் செய்ய முடியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, covid pandemic, blood donation, blood donation during pandemic, covid 19 pandemic, coronavirus death, indian express news,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

corona virus, covid pandemic, blood donation, blood donation during pandemic, covid 19 pandemic, coronavirus death, indian express news,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

கோவிட்-19 நோய்தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் , அண்மைகாலமாக எந்த ஒரு உடல் நலக்குறைபாடும் இல்லாதவர்கள் அல்லது கோவிட்19 நோய்தொற்றுக்கு உள்ளானவர்களோடு தொடர்பில் இல்லாதவர்கள் ரத்த தானம் செய்ய முடியும்

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கோவிட்-19 தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து மருத்துவ வசதிகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. கோவிட்-19 நோய்தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. மருத்துவமனை உள்ளிட்ட சுகாதாரத்துறை பிரிவுகளின் சுமை குறைந்திருக்கிறது, தவிர ரத்ததானம் அளிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இந்த கொரோனா தொற்றானது, ரத்த வங்கிகளின் விநியோகத்தை முன் எப்போதும் இல்லாதவகையிலான சவால்களுக்கு உட்படுத்தி இருக்கிறது. செஞ்சிலுவை சங்கத்தின் வாரந்திர அறிக்கையின் அடிப்படையில் 99 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுபட்ட பிரச்னைகள் 216 ஆக இருந்தன.

கொரோனா வைரஸ் தொற்று 2019-க்கு எதிரான போராட்டத்தில் செயலாற்ற வேண்டிய கடமைகள் குறித்து அண்மையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உடனடியாக அமல்படுத்த வேண்டிய சரி செய்ய வேண்டிய பிரச்னைகளில் ரத்தம் மறும் ரத்த கூறுகள் குறித்து சில வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பெருந்தொற்று பரவலின் போது ரத்தம் மற்றும் பிளாஸ்மா சேகரிப்பு மையங்கள் எவ்வாறு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நல்ல சுவாசம் கொண்ட சூழலையும் மற்றும் இருமல் அற்ற சூழலையும் நிர்வகிக்க வேண்டும்

கைகளை சுத்தப்படுத்தும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்

.

தரைகளை கிருமி நாசினி மருந்துகள், சுத்தம் செய்யும் பொருட்களை கொண்டு முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

ரத்ததான மையங்களில் உள்ள ஊழியர்கள் யாருக்காவது கோவிட் -19 நோய் தொற்று இருந்தால் அவர்களை பணிக்கு அனுமதிக்க க்கூடாது.

“பெருந்தொற்று பரவாமல் இருப்பதற்கான அப்போதைய பாதுகாப்பு நடைமுறைகளை கொள்கைகளை ஊழியர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

பெருந்தொற்றின் போது ரத்ததானம் பெற வேண்டியது மிகவும் முக்கியம். ரத்த இருப்பின் எண்ணிக்கை குறையக்கூடும். ரத்தத்துக்கு மாற்று வேறு எதுவும் இல்லை என்பதால், தேவை என்பது எப்போதும்போல்தான் இருக்கிறது. கோவிட் 19 பரவுவதைத் தடுக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ரத்த வங்கிகள், மருத்துவமனைகள் ரத்தத்தை தானமாக பெற வேண்டும்,” என்று பெங்களூரில் உள்ள ஃபோர்டீஸ் மருத்துவமனையின் தொற்று நோய்கள் பிரிவின் ஆலோசகர் மருத்துவர் ப்ரதிக் பாட்டீல் கூறுகிறார்.

கோவிட்-19 நோய் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் , அண்மைகாலமாக எந்த ஒரு உடல் நலக்குறைபாடும் இல்லாதவர்கள் அல்லது கோவிட்19 நோய்தொற்றுக்கு உள்ளானவர்களோடு தொடர்பில் இல்லாதவர்கள் ரத்த தானம் செய்ய முடியும்

நீங்கள் ரத்ததானம் செய்யப் போகிறீர்கள் என்றால் கீழ்கண்டவைகளை நினைவில் கொள்ளுங்கள்

கைகளை சுத்தம் செய்வதை நடைமுறைப்படுத்துங்கள்

சுத்தப்படுத்தாத கைகளில் உங்கள் முகத்தை தொடுவதைத் தவிருங்கள்.

எப்போதும் முகக்கவசம் அணிந்திருங்கள்

வீட்டுக்குத் திரும்பிய உடன் உங்களுடைய துணிகளை மாற்றுங்கள், சாத்தியமிருந்தால் குளிக்கலாம்.

தொற்று ஏற்படுவதைத் தடுக்க உங்கள் முகம் மற்றும் நாசிப்பகுதியை நன்றாகக் கழுவுங்கள்

நீங்கள் வீட்டில் இருந்தாலும் கூட மூலிகை காபியை ஒவ்வொரு நாளும் குடிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment